Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2023 15:59:02 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் 65 வீடுகள் நிர்மாணிப்பு

வீடற்ற தன்மை என்பது உலகெங்கிலும் ஒரு அழுத்தமான பிரச்சினை என்பதோடு இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இன்றியமையாத அம்சத்தை உணர்ந்து இலங்கை இராணுவம் எந்தவிதமான அலட்சியமும் இன்றி, உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆதரவுடன் வீடற்றவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முன்வந்துள்ளது.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் இராணுவத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராமசேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இன்றுவரை தகுதியுள்ள குடும்பங்களுக்கு 65 புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் வெற்றி கண்டுள்ளனர். அரசாங்கத்தின் ஒரு சதத்தை கூட செலவழிக்காமல் இராணுவத்தின் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையின் மீது முழு நம்பிக்கையுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நன்கொடையாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூக குழுக்களின் நிதி மற்றும் ஆதரவை படையினர் சிறப்பாக பயன்படுத்துகின்றனர்.

கொழும்பு, கம்பஹா, குருநாகல், புத்தளம், களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய பிராந்திய பாதுகாப்பை பேணுவதற்கும், போருக்குப் பின்னர் விரைவில் படையினரின் நலனைப் பாதுகாப்பதற்கும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2009 ஆம் ஆண்டில் மேற்கூறிய மாவட்டங்களில் வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டும் பணியில் தீவிர பங்காற்றும் ஒரு முக்கிய நிறுவனமாகச் செயல்படுகிறது.

அவர்களின் பாரம்பரிய எல்லைக்கு அப்பாற்பட்ட சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இராணுவத்தின் அர்ப்பணிப்பு உதவியதுடன் மற்றும் அவர்கள் சேவை செய்யும் பொதுமக்களுடன் ஒரு நேர்மறையான உறவை ஏற்படுத்தியதுடன் படையினர் தங்கள் சொந்த குடிமக்கள் மீது கொண்டிருக்கும் இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் இதயப்பூர்வமான காட்சியை பிரதிபலிக்கிறது. 2009 ஆம் ஆண்டு முதல் 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முயற்சி தங்குமிடத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமூக மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தலுக்கும் பங்களித்துள்ளது. இராணுவம் தனது முயற்சிகளைத் தொடர்வதால், இலங்கையில் வீடற்றவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கை அமைந்துள்ளதுடன் வழக்கத்திற்கு மாறான ஒத்துழைப்புகள் எவ்வாறு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சான்றாகவும் அமைந்துள்ளது.