Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2023 09:17:53 Hours

இராணுவ பொலிஸ் படையினரின் அர்ப்பணிப்பு சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

பொல்ஹெங்கொட இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையத்திற்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 01) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ தளபதியாக பதவியேற்று தனது முதல் விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்எம்எஸ்ஐ செனரத் ஆகியோர் இணைந்து அன்றைய பிரதம அதிதியை நுழைவாயிலில் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, அணிவகுப்பு சதுக்கத்தில் இலங்கை இராணுவ பொலிஸ் படையினரால் வழங்கப்பட்ட வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையை இராணுவத் தளபதி மதிப்பாய்வு செய்தார்.

அன்றைய நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முகமாக இராணுவத் தளபதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டதுடன், அணிவகுப்பு சதுக்கத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட முன்னாள் பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் அவர்களின் சிலையை திறந்து வைப்பதற்கு அழைக்கப்பட்டார். நினைவுச் சின்னமான பேரரசர் இராணுவ அமைப்பு மற்றும் பயிற்சியில் புரட்சியை ஏற்படுத்தியதுடன், பிரான்ஸ் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலான நிறுவனங்களில் மறையாத நினைவுச்சின்னங்களை விட்டுச் சென்றவர்.

அன்றைய நினைவுகளைச் சேர்க்கும் வகையில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வளாகத்தில் மாங்கன்று ஒன்றை நாட்டியதுடன், தலைமையகத்தில் புதிய இரண்டு மாடி தங்குமிட கட்டிடம், அதிகாரவானையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்களின் உணவகத்திற்கான புதிய கட்டிடத்திற்கும் அடிக்கல்லை நாட்டினார்.

இராணுவத் தளபதி அவர்கள் வளாகத்தில் உள்ள அனைத்து நிலை வீரர்களுக்கும் உரையாற்றியதுடன், அமைப்பின் ஒழுக்காற்றுத் தரங்களை மிக உயர்ந்த மட்டத்தில் வைத்திருப்பதற்காக அவர்களின் பணிகளுக்காக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரின் சேவைகளைப் பாராட்டினார். இந்த கடினமான காலங்களில் தங்கள் விதிவிலக்கான கடைமைகளை தொடரவும், படையணியின் முன்னேற்றத்திற்காக குழுவாக பணியாற்றவும் அவர்களை வலியுறுத்தினார்.

தளபதியின் உரையின் முடிவில், மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு தனது முதல் விஜயத்தின் நினைவாக சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

அனைத்து நிலையினருடனான தேநீர் ஏற்பாட்டின் போது இராணுவத் தளபதி சிப்பாய்களுடன் உரையாடியதுடன், அவர் புறப்படுவதற்கு முன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார். இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.