Header

Sri Lanka Army

Defender of the Nation

01st September 2023 18:01:42 Hours

ஈட்டி எறிதல் வீராங்கனையின் சாதனைக்கு பாராட்டு

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பிரபல ஈட்டி எறிதல் வீராங்கனையான தடகளத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த அதிகாரவாணையற்ற அதிகாரி 1 பிஎல நதீகா லக்மாலி, ஓய்வுபெறும் தருவாயில் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது, இராணுவத்தில் 23 வருட தடகள மற்றும் சேவையின் போது அவர் பெற்ற சிறப்பான சாதனைகளுக்காக இராணுவத் தளபதி அவரைப் பாராட்டினார். மேலும் அவரது எதிர்காலத் திட்டங்கள், வாய்ப்புகள் குறித்தும் கேட்டறிந்து, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதியினால் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 பிஎல் நதீகா லக்மாலிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களும் இந் நிகழ்வின் போது உடனிருந்தார்.

அதிகாரவாணையற்ற அதிகாரி 1 பி.எல்.நதீகா லக்மாலி 2000 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி இராணுவத்தில் சேர்ந்தார்.அவரது பதவிக் காலத்தில், சீனா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 22வது இடம் - ரஷ்யா -2013, மாஸ்க்வா ஐஎஎஎப் உலக சாம்பியன்ஷிப்பில் 12 வது இடம், 2014 இல் 6 வது மற்றும் 7 வது இடங்கள், பொதுநலவாய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2006 மற்றும் 2010 மற்றும் 2014 போட்டிகளில் 5 வது,7 வது மற்றும் 8 வது இடம் , 2019, 2015 மற்றும் 2007 இல் முறையே 3, 3 மற்றும் 4 வது இடம், சிஐஎஸ்எம் - உலக இராணுவ விளையாட்டுகள், 2011,2013,2003,2005, மற்றும் 2002 இல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2வது, 4வது, 5வது, 7வது மற்றும் 9 வது இடம்.

மேலும், அவர் 2005 முதல் 2019 வரை தொடர்ந்து தேசிய சாம்பியனானார், 2003, 2006, 2007, 2008, 2010, 2013, 2014, 2015, 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் சாம்பியன் ஆனார். பாதுகாப்பு சேவைகள் சாம்பியன்ஷிப் 2016, 2017 ஆம் ஆண்டில் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன்ஷிப்பை பெற்று கொண்டார்.