Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2023 12:43:06 Hours

புனரமைக்கப்பட்ட ‘தீகவாப்பிய’ புனித தாதுகளின் கண்காட்சி களனி ராஜமஹா விஹாரையில் திறப்பு

கிழக்கு ‘தீகவாப்பியவில் முழுமையாகப் புனரமைக்கப்பட்ட புனித தாதுகள் மற்றும் 'சூடாமாணிக்யா' (கலசம்) ஆகியவற்றின் கண்காட்சி களனி ராஜமஹா விஹாரையில் செவ்வாய்கிழமை (ஓகஸ்ட் 29) பிற்பகல் ஆரம்பமானது.

பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ எம்பீல், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

களனி இராஜமஹா விகாரையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், வண்ணமயமான ஊர்வலம், 'ரண்சிவிகேய' நினைவுச் சின்னங்களை ஏந்தியவாறு களனி பொலிஸ் நிலைய வளாகத்திலிருந்து களனி ரஜமஹா விகாரை வளாகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பக்தர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கு நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் புனித தீகவாப்பிய புனரமைப்பு பற்றிய விபரங்கள் ஒளிபரப்பப்பட்டன.

அடுத்ததாக மத அனுஷ்டானங்கள், 'பிரித்' பாராயணம் மற்றும் புனிதப் பொருட்களுக்கு 'கிலான்பச' வழங்குதல், பிரதிட்சை என்பன இன்னும் சில நாட்களில் நடைபெறும்.

பிரதம விருந்தினர் புனித தாதுக்கள் மற்றும் கலசத்தை பொதுமக்களுக்கு காட்சிக்கு திறந்து வைத்ததுடன், சில நாட்களுக்குப் பின் ‘தீகவாபியவில்’ பிரதிட்சை செய்யவுள்ள கலசம் மற்றும் நினைவு சின்னங்களுக்கு அழைப்பாளர்களும் பக்தர்களும் காணிக்கை செலுத்தினர்.

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணியாளர்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அந்தந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, பழமையான புனித ‘தீகவாப்பிய’ மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.