Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2023 11:17:38 Hours

இராணுவத்தின் 5வது இலங்கை அமைதிகாக்கும் படையணி மாலிக்கு பயணம்

மாலி ஐக்கிய நாடுகள் சபையின் பல பரிமாண ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணியில் பணியாற்றுவதற்காக 5வது இலங்கை அமைதிகாக்கும் படையணியின் 03 அதிகாரிகள் மற்றும் 70 சிப்பாய்கள் அடங்கிய இரண்டாவது குழு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வின் பின் செவ்வாய் (29 ஓகஸ்ட்) மாலை மாலிக்கு புறப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும், இலங்கை சிங்க படையணியி்ன் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வழி அனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

5வது இலங்கை அமைதிகாக்கும் படைக் குழுவில் இலங்கை சிங்க படையணி, இலங்கை கவச வாகனப் படையணி, இலங்கை பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞை படையணி, இயந்திரவியல் காலாட் படையணி, பொறியியல் சேவைகள் படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, இராணுவ போர் கருவி படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி மற்றும் இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றில் படையினர் உள்ளடங்குவதுடன், அவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கை சிங்க படையணியைச் சார்ந்தவர்கள்.

குழுவினர் புறப்படுவதற்கு முன் விமான நிலையத்தில் இருந்த சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். முழுக் குழுவில் 170 படையினரில் முதல் தொகுதி 01 ஜூலை 2023 அன்று மாலிக்கு புறப்பட்டது.

செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஎல்எஸ்எஸ் லியனகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யுஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் விமான நிலையத்தில் வழிஅனுப்ப கலந்துகொண்டனர்.