Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2023 11:51:27 Hours

'பெருமைமிகு சவாரி' பயணத்தில் மூன்று இராணுவ வீரர்கள்

ஓய்வு அல்லது முதிர்ச்சி உறுதி மற்றும் உற்சாகத்திற்கு தடையாக இருக்காது என்பதை நிரூபித்து, மூன்று இராணுவ வீரர்களான, மேஜர் ஜெனரல் எஸ்ஆர் பாலசூரிய (ஓய்வு) யுஎஸ்பீ, மேஜர் ஜெனரல் கேபீஎஸ் பிரேமலால் (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் கேணல் டபிள்யூஎன்பீஎஸ்கே பெரேரா (ஓய்வூ) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்று (29) காலை தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான 582 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய 'ரைட் வித் பிரைட்' நல்லெண்ண சைக்கில் சவாரியை ஆரம்பித்துள்ளனர்.

காலி, அளுத்கம, கொழும்பு, நீர்கொழும்பு, புத்தளம், மதவாச்சி, வவுனியா, கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு ஊடாக 'பெருமையுடன் சவாரி' ஞாயிற்றுக்கிழமை (செப். 03) வடக்கு பருத்தித்துறையை சென்றடையவுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இந்த சவாலான பயணத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகளை வழங்கினார்.

இலங்கை பீரங்கி படையணியின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இராணுவத்தின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் பெருமையை அடையாளப்படுத்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். மிக அண்மைக் காலத்தில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர், தங்களின் ஓய்வுக்குப் பிறகு, தெற்கில் இருந்து வடக்கிற்கு நல்லெண்ணச் செய்தியை எடுத்துச் செல்வதற்காக, இந்த நீண்ட தூர சைக்கில் சவாரியை கூட்டாக மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ,இலங்கை பொறியியல் படையணியின் 03 சைக்கில் ஓட்ட வீரர்களும் மற்றும் இலங்கை சிங்க படையணியில் சேர்ந்த 03 சைக்கில் ஓட்ட வீரர்களும் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைந்துள்ளனர்.