Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2023 09:32:09 Hours

இராணுவத் தளபதியால் கராத்தே பாடசாலை சாம்பியன்களுக்கு உதவி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வெள்ளிக்கிழமை காலை (ஓகஸ்ட் 25) மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டதுடன், ஜூன் மாதம் நடைபெற்ற அகில இலங்கை 'கத' கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 12 தங்கம் மற்றும் 19 வெள்ளிப் பதக்கங்களை வென்ற அலவகும்புர மத்திய கல்லூரியை சேர்ந்த 31 மாணவர்களையும் சந்தித்தார்.

இராணுவத் தளபதியின் விஜயம் பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. இச் சந்தர்ப்பத்தில் பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளைக் கொண்ட இப் பாடசாலையில் விளையாட்டு வீரர்களைத் தூண்டும் வகையில் இராணுவத் தளபதி ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இந்த தொலைதூரப் பாடசாலையின் கராத்தே அணி, அகில இலங்கை 'கத' கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள கொழும்பு செல்வதற்கான செலவை திரட்ட முடியாமல் இராணுவத் தளபதியிடம் உதவி கோரியது. பெற்றோர்களால் போக்குவரத்துக்கான பண வசதியிண்மையினால் சம்பியன்ஷிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த தேவை ஏற்பட்டதுடன், தளபதி அவர்கள் இராணுவ ஒருங்கிணைப்பு மூலம் இராணுவ பேருந்தில் கொழும்புக்கு செல்வதற்கு உடனடியாக வசதி செய்து கொடுத்தார்.

இப்பாடசாலையின் இளம் கராத்தே வீரர்கள் எதிர்கால நம்பிக்கையை மீண்டும் எழுப்பி வெற்றியாளர்களாக வெளிப்பட்டு 12 தங்கம் மற்றும் 19 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இராணுவத் தளபதி அந்த மாணவர்களுடன் தனது சுருக்கமான உரையாடலின் போது அவர்களை வாழ்த்தியதுடன் அவர்களின் எதிர்கால கற்றல் மற்றும் தடகளத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.