Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2023 09:36:00 Hours

இராணுவ தளபதி மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வெள்ளிக்கிழமை காலை (ஓகஸ்ட் 25) மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டதுடன், அவர்களது பயிற்சி பாடத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்தார்.

இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் முறையான விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதியை இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி ஏபிஜேஎன் ஆரியதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் வரவேற்றார்.

இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரியான கேணல் எம்டிஐ குணவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்பீ அவர்களால் பிரதம அதிதிக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.

பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் மணல் மாதிரி அறையில் எதிர் கிளர்ச்சி வன பயிற்சி பாடநெறி - 33 ன் ‘மணல் மாதிரி சுருக்கம்’ மற்றும் இளம் அதிகாரிகள் பாடநெறி - 68 பி இன் ‘கற்பித்தல் பயிற்சி’ விளக்கக்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் இராணுவத் தளபதி இராணுவப் பயிற்சி பாடசாலையின் இன் தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டுமானத்தில் உள்ள புதிய அரங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது அந்த நிர்மாணங்களின் கட்டளை அதிகாரி இராணுவத் தளபதியிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றார்.

சண்டை பயிற்சி நடைபெறும் இடத்தை அவர் பார்வையிட்டதுடன், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் ஆர்ப்பாட்டக் குழுவால் நடாத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தையும் பார்வையிட்டார். பின்னர் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் உடற்பயிற்சி தளத்தில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் முடிவடைந்தன.

இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி ஆகியோருக்கு இடையிலான நினைவுச் சின்ன பரிமாற்றம் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் நிகழ்ச்சியை உச்சத்திற்கு கொண்டு வந்தது.

மதுருஓயா இராணுவப் பயிற்சி பாடசாலை இராணுவ நடவடிக்கைகளில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தந்திரோபாயங்கள், நுட்பங்கள், நடைமுறைகள் பற்றிய திறன்கள், இராணுவத்தின் கிளர்ச்சி மற்றும் வனப்போர் அறிவை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு நோக்குடன் செயல்படும் சிறந்த பயிற்சி பாடசாலைகளில் ஒன்றாகும்.

காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேஎம்டப்ளியுஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இவ்விஜயத்தில் கலந்து கொண்டனர்.