23rd August 2023 21:05:12 Hours
இரக்கம் மற்றும் சமூக சேவையின் இதயத்தைத் தூண்டும் வகையில் கருதப்படக்கூடிய வகையில், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இராணுவ மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் அரசு சாரா நிறுவனங்கள், மனிதாபிமான முகவர் நிறுவனங்கள், தெற்கில் உள்ள நன்கொடையாளர்கள், வெளிநாட்டு அனுசரனையாளகள் மற்றும் உள்ளூர் சமூகக் குழுக்களின் ஆதரவுடன் வசதியற்ற குடும்பங்களுக்கு மொத்தம் 761 வீடுகளை நிர்மாணித்துள்ளது. அதேபோல், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதிகள், படைப்பிரிவுகள் தளபதிகள் மற்றும் பிரிகேட் தளபதிகள் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் தன்னலமற்ற முயற்சியின் கீழ் இதுபோன்ற மேலும் 13 புதிய வீடுகள் ஏழைகளுக்காக கட்டப்பட்டு வருகின்றன.
மத்திய பகுதியில் இந்த இலட்சிய முன்முயற்சி, வாழ்க்கை மேம்பாட்டினை மாற்றியமைக்கும் பணி என்று கூறலாம், தலைக்கு தங்குமிடம் என்ற அழுத்தமான பிரச்சினைக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல், போதுமான மற்றும் ஒழுக்கமான வீட்டுப் பாதுகாப்பு இல்லாமல் நீண்டகாலமாக அவதிப்பட்டு வருகின்ற அவர்களின் வாழ்வாதாரத்தின் தரத்தை உயர்த்துவதற்காக இராணுவத்தினரால் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண்டி, மாத்தளை, நுவரெலியா, மொனராகலை, பதுளை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பாதுகாப்பைப் பேணுதல், இராணுவ நடவடிக்கைகளை நடத்துதல், தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை மற்றும் சிவில்-இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு உதவும் நோக்கத்துடன் 2013 மார்ச் 14 ஆம் திகதி நிறுவப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் ஹம்பாந்தோட்டை கிராம உத்தியோகத்தர்களிடம் கலந்தாலோசித்து, அத்தகைய நிர்மாணங்களுக்கு நிதி தேடப்படுவதற்கு முன்னர், அந்த பிரதேசங்களில் வீடற்றவர்களின் வீட்டுத் தேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
மேலும் குறிப்பிடத்தக்க வகையில், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல திறமையான இராணுவ வீரர்கள் தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்துடன் அந்தந்த அரச அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் தகுதியானவர்களுக்கு 761 வீடுகளை நிர்மாணிப்பதில் வெற்றி பெற்றனர். இராணுவத்தினரால் நன்கொடையாளர்கள் அல்லது வெளிநாட்டு நன்கொடையாளர்களினால் இத் திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இராணுவத்தினரின் அனுசரணையில் மத்தியப் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளுக்கு 761 குடும்பங்கள் சென்றுள்ளனர்.
தற்போதைய நிலையில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் மத்திய தளபதி, படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் பிரிகேட் தளபதிகள் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் தன்னலமற்ற முயற்சியின் கீழ் மேலும் 13 ஏழைகளுக்கான புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. மேற்குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதில் இலங்கை இராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இரக்கம், ஒத்துழைப்பு மற்றும் சமூக அர்ப்பணிப்பு சேவையின் சக்திக்கு சான்றாகும். இந்த முன்முயற்சியின் மூலம், வாழ்க்கை மீண்டும் கட்டமைக்கப்படுகிறது, எதிர்காலம் மறுவடிவமைக்கப்படுகிறது, மேலும் குடும்பங்கள் கண்ணியமாகவும் வாழத் தகுதியுடையதாகவும் ஆக்கப்படுகின்றன.