22nd August 2023 15:30:14 Hours
இராணுவ சட்ட சேவைகள் பணிப்பகம் முப்படை வீரர்களுக்கு ‘ஆயுதப்படை சட்ட அதிகாரிகளின் எல்லைக்குள் சட்ட அமலாக்கத்தின் கடமை மற்றும் பொறுப்பு’ என்ற தலைப்பில், கற்பிக்கும் நோக்கத்துடன் வெள்ளிக்கிழமை (18) இராணுவ தலைமையகத்தில் ஒரு விரிவுரையை நடாத்தியது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் நேரடி வழிகாட்டுதலுக்கமைய சட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் என்எஸ் நல்லப்பெரும யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் ஆலோசனையின் பேரில் இவ் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
இராணுவத் தலைமையக சட்ட பணிப்பகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், முன்னாள் சட்ட வல்லுனர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எம்ஏஎம் பீரிஸ் (ஓய்வு) யுஎஸ்பீ அவர்களால் ‘சிப்பாயின் ஒழுக்காற்று நடவடிக்கை நடைமுறைகள் மற்றும் சட்ட அமுலாக்கம்’ தொடர்பான விரிவுரையை நிகழ்த்தினார்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 85 க்கும் மேற்பட்ட சட்ட அதிகாரிகள் இச் செயலமர்வில் பங்கேற்று, விருந்தினர் விரிவுரையாளருடன் கேள்விகள் மற்றும் பதில்கள் மூலம் உரையாடினர்.
விரிவுரையின் இறுதியில், இராணுவத் தளபதி விருந்தினர் விரிவுரையாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.