Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2023 21:39:55 Hours

இராணுவத்திற்கு சீனாவின் தகவல் தொடர்பாடல் வாகனங்கள்

சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சு அன்பளிப்பாக வழங்கிய 11 விசேட தொடர்பாடல் வாகனங்களை இன்று (ஓகஸ்ட் 22) காலை இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டது. பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ எம்பீல் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்ச்சி இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, மற்றும் இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேணல் ஷோஹுபோ ஆகியோர் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இரு நாடுகளிலும் உள்ள இராணுவத்தினரிடையே நிலவும் நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை திரையிட்டனர். வாகனங்கள் வழங்குவது தொடர்பான ஆவணங்களில் முறையான கையொப்பமிடும் நிகழ்வு இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேணல் ஷோஹுபோ மற்றும் இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியும், சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டியூ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது.

பத்து கள தொடர்பாடல் வாகனங்கள் மற்றும் ஒரு நடமாடும் தொடர்பாடல் வாகனம் மற்றும் கட்டுப்பாட்டு வாகனம் கௌரவ. பிரேமிதா பண்டார தென்னகோன், சிரேஷ்ட கேணல் ஷோஹுபோ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள், இலங்கையின் ஆயுதப்படை பயன்படுத்தும் அந்த புதிய வாகனங்களை பார்வையிட்டனர்.

பிரதி பதவி நிலை பிராதனி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.