Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2023 20:23:50 Hours

அமெரிக்க இராணுவத்தின் 8 வது தியேட்டர் சஸ்டெயின்மென்ட் கட்டளை பிரதிநிதிகள் இராணுவ பதவி நிலை பிரதானியை சந்திப்பு

அமெரிக்க இராணுவத்தின் 8 வது தியேட்டர் சஸ்டெயின்மென்ட் கட்டளை பிரதிநிதிகள் இராணுவத் தளபதியுடனான முறையான கலந்துரையாடல்களுக்குப் பிறகு ஓகஸ்ட் 16 அன்று இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களை சந்தித்தனர்.

உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களின் போது வருகை தந்த தூதுக்குழுவுடன் இணைந்து நாட்டின் கண்ணிவெடி அகற்றும் செயல்முறை தொடர்பான விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய வழங்கல் விடயங்களை கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின் முடிவில் அமெரிக்க இராணுவத்தின் 8 வது தியேட்டர் சஸ்டைன்மென்ட் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெராட் ஹெல்விக் தலைமையிலான குழுவின் 130 வது பிரிகேட் தளபதி கேணல் மெக்கணிகல் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி லெப்டினன் கேணல் என்தோனி நெல்சன், நிர்வாக அதிகாரி மேஜர் தெரசா ஆகியோருக்கு இராணுவ பதவி நிலை பிரதானியினால் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.

இக் கலந்துரையாடலின் போது இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் மற்றும் பிரதம கள பொறியியலாளர் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.