18th August 2023 20:08:13 Hours
34 வருட சேவையின் பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இன்று (18) காலை 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே எம் ஆர் என் கே ஜயமான்ன ஆர்டப்ளியுபீ அவர்களையும் குடும்ப உறுப்பினர்களை இராணுவ தளபதி அலுவலகத்திற்கு அழைத்தார்.
உரையாடல்களின் போது இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன் போர்க்களம் மற்றும் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் நினைவுகளை நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி அவரது எதிர்காலத் திட்டங்களைக் கேட்டறிந்ததுடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜே எம் ஆர் என் கே ஜயமான்ன ஆர்டப்ளியுபீ அவர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்ட இராணுவத் தளபதி அலுவலகத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வார்த்தைகளைப் பேச மறக்கவில்லை. ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் சவாலான சந்தர்ப்பங்களில் தளபதிக்கு அளித்த ஆதரவையும் தளபதி நினைவு கூறினார். பதிலுக்கு மேஜர் ஜெனரல் ஜே எம் ஆர் என் கே ஜயமான்ன ஆர்டப்ளியுபீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி வழங்கிய வழிகாட்டலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
உரையாடலின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டுச் சின்னமாக விசேட நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு விசேட பரிசையும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு;
மேஜர் ஜெனரல் ஜே எம் ஆர் என் கே ஜயமான்ன ஆர்டப்ளியுபீ அவர்கள் 1989 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து கொண்டு இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தியத்தலாவையில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட அவர், இரண்டாம் லெப்டினன் நிலையில் 14 நவம்பர் 1991 கெமுணு ஹெவா படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 10 ஓக்டோபர் 2022 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
மேஜர் ஜெனரல் ஜே எம் ஆர் என் கே ஜயமான்ன ஆர்டப்ளியுபீ அவர்கள் ஒரு காலாட்படை வீரராக இருந்ததால், அவர்கள் யுத்தத்தின் போது வீரத்தை வெளிப்படுத்தியதற்காக ரண விக்கிரம பதக்கத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓய்வுபெறும் போது 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்துள்ளார். அவர் 4 வது கெமுணு ஹேவா படையணியின் குழு தளபதி, 4 வது கெமுணு ஹேவா படையணியின் போக்குவரத்து அதிகாரி, 4 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, 524 வது பிரிகேடின் பொது பணி நிலை அதிகாரி 3, ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2(நிதி), 551 வது காலாட் பிரிகேட் மேஜர், அமைதி ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் – இலங்கை, ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிலைப்படுத்தல் பணி இலங்கை படையணியின் கட்டளை அதிகாரி, 9 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, கூட்டு சேவைகள் மொழிப் பயிற்சி நிறுவனத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், 68 வது காலாட் படை பிரிவின் கேணல் (பொது பணிநிலை), இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி பிரதி நிலைய தளபதி, 232 வது காலாட் பிரிகேட் தளபதி, காலாட்படை பயிற்சி நிலையத்தின் பிரதி தளபதி, கெமுணு ஹேவா படையணி நிலைய தளபதி, இரத்தினபுரி மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் போர் பயிற்சி பாடசாலையின் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
அவர் தனது இராணுவ வாழ்க்கையில் படையலகு நிர்வாக பாடநெறி, ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, மோட்டார் போக்குவரத்து அதிகாரி பாடநெறி, ஐஎச்எல் மற்றும் எச்ஆர் அடிப்படை பயிற்றுவிப்பாளர் பாடநெறி, காலாட் படை இளம் அதிகாரிகள் பாடநெறி – பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை அதிகாரி பாடநெறி – இந்தியா, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் பயிற்றுவிப்பாளர் பாடநெறி - மங்கோலியா மற்றும் படையலகு கட்டளை அதிகாரிகள் பாடநெறி – சீனா உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.