Header

Sri Lanka Army

Defender of the Nation

16th August 2023 17:38:22 Hours

அமெரிக்க இராணுவத்தின் 8வது தியேட்டர் சஸ்டெயின்மென்ட் கட்டளை பிரதிநிதிகளுக்கு நடவடிக்கை வழங்கல் பற்றிய அறிவு

அமெரிக்க இராணுவத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெராட் ஹெல்விக் தலைமையிலான அமெரிக்க இராணுவத்தின் 8வது தியேட்டர் சஸ்டைன்மென்ட் கட்டளை பிரதிநிதிகள் குழவைின் விஜயத்தில் 130 வது பொறியியல் பிரிகேட் தளபதி கேணல் மெக்குனெகல் அவர்களுடன் இணைந்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி லெப்டினன் கேணல் என்தோனி நெல்சன், நிர்வாக அதிகாரி மேஜர் தெரசா ஆகியோர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களை புதன்கிழமை (ஓகஸ்ட் 16) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.

தூதுக்குழுவின் தலைவர் முதலில் அமெரிக்க இராணுவத்தின் 8வது தியேட்டர் சஸ்டைன்மென்ட் கட்டளை மற்றும் அதன் முன்னுரிமைகள் பற்றிய விளக்கத்தை அளித்தார். அமெரிக்க இராணுவத்தின் 8வது தியேட்டர் சஸ்டைன்மென்ட் கட்டளை, ஒருங்கிணைக்கும் அதே வேளையில், பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான பன்னாட்டு நிலைத்தன்மை தீர்வுகளை வழங்குவதற்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார். பல்வேறு செயல்பாடுகளுக்கான மூலோபாய நிலைப்புத் திறன்களை எடுத்துரைத்தார்.

அதன் பின்னர், அமெரிக்கப் பிரதிநிதிகளும் இலங்கை இராணுவத் தளபதியும் தற்போதைய வழங்கல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இலங்கை இராணுவத்தின் வழங்கல் பணிகள் மற்றும் திறன்கள் குறித்து கலந்துரையாடினர். அவர்கள் குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவதில் மற்ற இடங்களில் உள்ள அமெரிக்க இராணுவம் மற்றும் படைகள் தொடர்பான வழங்கல் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில், வருகை தந்த அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இராணுவத் தளபதி நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ, இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யுஎம் பெர்னாண்டோ டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, ஆகியோர் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துரையாடலில் பங்குபற்றினர்.