16th August 2023 00:13:08 Hours
பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியும் பொறியியல் சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார அவர்கள் ஓய்வு பெற்று செல்லும் முன் குடும்ப உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 15) இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்ததார்.
இந்த சந்திப்பின் போது ஓய்வுபெறும் அதிகாரியின் பொறியியல் திறன்களுடன் தொடர்புடைய பல நினைவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களின் சாதனைகள் நிறைந்த அவரது 34 ஆண்டுகால வாழ்க்கைக்கு இராணுவத் தளபதி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
பதிலுக்கு மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி வழங்கிய வழிகாட்டலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அந்த சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களால் அவரது வாழ்க்கை முழுவதும் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டினார்.
உரையாடலின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டுச் சின்னமாக விசேட நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு விசேட பரிசையும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு
மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார அவர்கள் 1989 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து கொண்டு, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி இரத்மலானை மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தியத்தலாவ ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட அவர், இரண்டாவது லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். 14 நவம்பர் 1991 பொறியியல் சேவைகள் படையணியில் நியமிக்கப்பட்டார். அவர், 2023 மே 18 மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.
அவர் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியும் இராணுவ தலைமையகத்தின் பொறியியல் சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனுராதபுரம் பொறியியல் பிரிவு மற்றும் வெலிஓயா, 2 வது பொறியியல் சேவைகள் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 8 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் பிரதிப் பணிப்பாளர், நிர்மாண முகாமைத்துவ பிரிவு, பாதுகாப்பு தலைமையக கட்டளை அதிகாரி, 2வது பொறியியல் சேவைகள் படையணியின் பொறியியல் விவகார ஆலோசகர், பொறியியல் பாதுகாப்பு அமைச்சக திட்ட முகாமையாளர், தியகம,ஹோமாகம விளையாட்டு வளாக பிரதி நிலைய தளபதி, பொறியியல் சேவைகள் படையணியின் நிலைய தளபதி, இராணுவ தலைமையகத்தின் பொறியியல் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.
மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளைப் பின்பற்றியுள்ளார். அவையாவன அலகு நிர்வாக பாடநெறி, ஐக்கிய நாடுகள் வழங்கல் அதிகாரிகள் பாடநெறி, பங்களாதேஷ் கனிஷ்ட அதிகாரி நிர்வாக பாடநெறி, இந்தியா பொறியியல் அதிகாரிகளின் பணி நடைமுறை பாடநெறி, இந்தோனேசியா ஐக்கிய நாடுகளின் பணி நிலை மற்றும் வழங்கல் அதிகாரி பாடநெறி மற்றும் இந்தியா சிரேஷ்ட பாதுகாப்பு முகாமை பாடநெறி ஆகியவற்றை பின்பற்றியுள்ளார்.
மேலதிகமாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் முதுகலை அறிவியல், சிவில் பொறியியல் இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்) போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத தகுதிகளைப் படித்துள்ளார். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின், கணினி வரைவு மற்றும் வடிவமைத்தல் நிறுவனத்தில் திட்ட முகாமைத்துவ பாடநெறி, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கணினி உதவி வரைவிற்கான உயர் பாடநெறி, தீ கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பாடநெறி வடிவமைத்தல், மின்சார நிறுவல் பாடநெறி வடிவமைப்பு மற்றும் குழாய்கள் பொறியியல் இலங்கையின் பொறியாளர்கள் நிறுவனத்தில் குளிரூட்டி முறைமை வடிவமைப்பு ஆகிய பாடநெறிகளை கற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.