16th August 2023 00:16:54 Hours
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் விடைபெற்று செல்லும் முன் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 15) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்ததுடன் அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளைச் தெரிவித்துக் கொண்டதுடன் இராணுவ வாழ்க்கையில் தடங்களையும் அழியாத நினைவுகளை இராணுவ தளபதி நினைவு கூர்ந்தார்.
மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ வாழ்க்கைக்குப் பின்னர் விரைவில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி போர்க்கள அனுபவங்கள் மற்றும் மே 2009 க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளில் அவர் எவ்வாறு பங்களிப்பு வழங்கினார் தொடர்பான பல கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
சந்திப்பின் போது, வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களை பெற்றார், அவர் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் மதிப்புமிக்க விஜயபாகு காலாட்படையணியின் உறுப்பினராக இராணுவத்திற்கான தனது பணித்திறன், அர்ப்பணிப்பு தொடர்பாக கலந்துரையாடினார்.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் மற்றும் அவருடன் வருகை தந்த குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் சந்திப்பின் முடிவில் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். சவாலான பணியில் ஈடுபட குடும்ப உறுப்பினர்கள் அளித்த ஆதரவையும் அவர் குறிப்பிட்டார்.
மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களும் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் அவர் அமைப்பில் பணியாற்றிய காலத்தில் அவர் பெற்ற ஊக்கத்தைக் குறிப்பிட்டார்.
உரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பரிசும் பாராட்டுக்கான அடையாளமாக ஓய்வுபெறும் அதிகாரிக்கு சிறப்பு நினைவுச்சின்னத்தை வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் வருமாறு;
மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் 21 ஜூலை 1987 இல் இணைந்தார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் – இரத்மலானை மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தியத்தலாவ ஆகியவற்றில் தனது இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாவது லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து 23 ஜூன் 1989 விஜயபாகு காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் தனது சேவையின் போது தொடர்ந்து பதவிகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 01 ஒக்டோபர் 2020 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் ஒரு காலாட்படை வீரராக இருந்ததால், அவர்கள் யுத்தத்தின் போது வீரத்தை வெளிப்படுத்தியதற்காக வீரவிக்கிரம விபூஷணய, ரண விக்கிரம பதக்கம், மற்றும் ரண சூர பதக்கம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓய்வுபெறும் போது விஜயபாகு காலாட் படையணியின் படைத்தளபதியாகவும், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். 1 வது விஜயபாகு காலாட் படையணியின் புலனாய்வு அதிகாரி, 1 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரி கட்டளையாகவும் இயக்க பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2, இராணுவ செயலாளர் கிளையின் பணி நிலை அதிகாரி, 1 வது விஜயபாகு காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, கூட்டு இயக்க தலைமையக பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்/திட்டம்), பொதுப் பணி நிலை அதிகாரி , 1 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, கொழும்பு கட்டளை நடவடிக்கை பிரிவு தளபதி, ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஸ்டெபிலைசேஷன் மிஷன் கூட்டு நடவடிக்கை தலைமையகம், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பணிப்பாளர். 68 வது காலாட் படை பிரிவின் தளபதி, 515 வது காலாட் பிரிகேட் பயிற்சிக் குழுவின் தலைமை தளபதி, தற்காப்பு மற்றும் பணியாளர் சேவைகள் தளபதி, 641 வது காலாட் பிரிகேட் தளபதி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு), பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி, 53 வது காலாட்படை பிரிவின் தளபதி, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி, இராணுவ பயிற்சி கட்டளை தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் பொதுப் பணி பணிப்பகம் இராணுவத் தலைமையகம் மற்றும் முதலாம் படை படைத்தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
படையணி அணிக்கட்டளை பாடநெறி, படையணி அணி ஆயுதப் பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி, இராணுவக் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி, பங்களாதேஷ் அதிகாரிகளின் ஆயுதப் பாடநெறி – இந்தியா, இளம் அதிகாரிகளின் பாடநெறி, கனிஷ்ட கட்டளை,சிரேஷ்ட கட்டளை பாடநெறி இந்தியா போன்ற பல உள்நாட்டு வெளிநாட்டுப் பட்டபடிப்புகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பின்பற்றியுள்ளார்.
மேலும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாதுகாப்புக் கற்கைகள், அமெரிக்காவின் கடற்படை முதுகலைப் கல்லூரியில், பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் மோதல் தீர்மானம் மற்றும் சமாதானத் தயார்நிலையில் முதுகலைப் டிப்ளோமா போன்ற உயர் கல்வித் தகைமைகளுக்காகப் படித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்) மற்றும் மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைகள் பட்டபடிப்பு போன்ற வற்றையும் பின்பற்றியுள்ளார் .