Header

Sri Lanka Army

Defender of the Nation

14th August 2023 19:15:00 Hours

தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையிடன் இணைந்து கனரகப் பயிற்சி

இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை, இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்று கொடுக்கும் நோக்கில், கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரண இயக்கம் தொடர்புடைய திறன்களில் பயிற்சி பெற தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை தேசிய தொழில் தகுதி நிலை - 4 உடன் பொருந்தக்கூடிய கனரக பயிற்சி பாடநெறிகளை நடாத்துவதற்கு இராணுவத்தினரின் உதவியை நாடுகிறது

அதற்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இன்று (ஓகஸ்ட் 14) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் திரு டபிள்யு ருச்சிர அமரசேகர ஆகியோரின் தலைமையிலான தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் தளபதி அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆறு மாத கால 'கனரக இயந்திர பயிற்சி' பாடநெறி- தொழில் தகுதி நிலை தரம் 4 - அனுராதபுரம், திசாவெவவில் உள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பயிற்சிப் பாடசாலையில் நடைப்பெற்றது. நாற்பது மாணவர்களை கொண்ட திசாவெவ இராணுவப் பயிற்சியானது, 47 நாட்களுக்கு இராணுவப் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவுடன் தொழில் தகுதி நிலை - 4 க்கு தகுதி பெற்றனர்.

தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் கனரக இயந்திர பயிற்சியானது, இராணுவத்தின் மூலம் 'ஒழுக்கமுள்ள' ஓட்டுநரை உருவாக்குவதற்கான பயிற்சியை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இது போன்ற திறமையான பயிற்சிக்கான மகத்தான வாய்ப்புகள் இப்போது வெளிநாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபைக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த வெளிநாட்டு வேலை சார்ந்த திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்க உறுதியளித்ததுடன், அநுராதபுரம் திசாவெவ இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பயிற்சிப் பாடசாலை பாடநெறியின் இறுதிப் பகுதியை எளிதாக்குவதற்கும் ஒப்புக்கொண்டார்.

இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யுடபிள்யுடபிள்யுடபிள்யுஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி, விநியோக மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் பிரிகேடியர் ஈஎம்ஜிஏ அம்பன்பொல ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பிரதித் தலைவர் திரு. எஸ்எச் ஹரிச்சந்திர, தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. டபிள்யுஎம்எஸ் விஜேசிங்க மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் திரு. டபிள்யுஏகேஎஸ் குமார ஆகியோர் இராணுவத் தளபதி அவர்களுடன் உடனிருந்தனர்.