Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2023 09:20:35 Hours

இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதிக்கு பிரியாவிடை

இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியும் 61 காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தில் இருந்து 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வு பெறுவதற்கு முன் வியாழன் (10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ அவர்களை தனது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

சிரேஷ்ட இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி அவரது அர்ப்பணிப்புமிக்க சேவைகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளை தவறாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற செயல்பாட்டிற்காக பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சக்கட்டத்தின் போது மற்றும் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் ஓய்வு பெறவிருக்கும் அவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் பாத்திரங்கள் பற்றிய நினைவுகளையும் அவர் புதுப்பித்தார்.

மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள், இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியாக தனது கடமைகளை நிறைவேற்ற இராணுவத் தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மூத்த மகன் தற்சமயம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிலவளல் அதிகாரியாக பாடநெறியை பின்பற்றுகிறார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக வீட்டின் வெளியே நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயம், சவாலான காலகட்டங்களில், சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி பாராட்டினார். இச்சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டுச் சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் குடும்பத்திற்கு விசேட பரிசையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் ஆட்சேர்க்கப்பட்டதுடன், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 30 ஏ இல் இராணுவப் அடிப்படை பயிற்சியைப் தொடர்ந்தார். தனது பயிற்சியின் பின்னர்,இரண்டாம் லெப்டினன் நிலைக்கு நியமிக்கப்பட்டார், பின்னர் இலங்கை இலேசாயுத காலாட்படையணியில் சேவையை தொடர்ந்தார். பின்னர் 04 பெப்ரவரி 2007 அன்று இயந்திரவியல் காலாட் படையணியில் பதவி வகித்தார். அவர் 2022 மே 18 அன்று மேஜர் ஜெனரல் நிலை உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஓய்வுபெறும் போது 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகவும், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியாவும் பதவி வகித்து வருகிறார். அவர் 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் குழு கட்டளையாளர், 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புலனாய்வு அதிகாரி, 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, பொதுப் பணிநிலை அதிகாரி 2 (பயிற்சி மற்றும் ஆதரவு), இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி, 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, செயல்பாட்டு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்), தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தில் இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 22 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்), இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2, இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரி, 1 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டளை அதிகாரி (பயிற்சி பிரிவு), ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் பீடம் தலைமை அதிகாரி, சுதந்திர பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 - இராணுவத் தலைமையகம், இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் பிரதி நிலையத் தளபதி, இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி, கேணல் இராணுவச் செயலாளர் (இராணுவச் செயலாளர்) கிளை - இராணுவத் தலைமையகம், 544 மற்றும் 652 வது காலாட் பிரிகேட் தளபதி, (கருத்து மற்றும் கண்காணிப்பு) பணிப்பகத்தின் பணிப்பாளர், மற்றும் 52,53 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதி ஆகிய நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவரது பங்களிப்பைப் பாராட்டி ஐந்து முறை ‘ரண விக்கிரம பதக்கம்’ (ஆர்டபிள்யுபீ) மற்றும் இரண்டு முறை ‘ரண சூர பதக்கம்’ ஆகிய பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் தனது இராணுவப் பணியின் போது குழு கட்டளையாளர் பாடநெறி, படைப்பிரிவு தளபதிகளின் தந்திரோபாய பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான அடிப்படை பயிற்றுவிப்பாளர் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பின்பற்றினார். அதிகாரிகளுக்கான உரிமைகள் மேம்பட்டு பாடநெறி, அடிப்படை பரசூட் பாடநெறி, படையலகு கட்டளையாளர் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் பணிகளுக்கு முந்தைய பயிற்சிப் பாடநெறி, அதிகாரிகளின் உடல் பயிற்சிப் பாடநெறி - பாகிஸ்தான், இளம் அதிகாரிகளின் பாடநெறி - இந்தியா, கனிஷ்ட கட்டளையாளர் பாடநெறி - இந்தியா, காலாட்படையணி பாடநெறி - சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பயிற்சி பாடநெறி - பாகிஸ்தான். படைப்பிரிவு தளபதிகளின் தந்திரோபாய பாடநெறி, புலனாய்வு அதிகாரிகள் பாடநெறி, பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகளின் பாடநெறி, ஏயார் மொபைல் பாடநெறி, அதிகாரிகளின் செயல்பாட்டு பணியாளர்கள் கடமைகள் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி, தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பயிற்சி பாடநெறி, பணியகம். அடிப்படை தியானத் திறன்கள் மற்றும் செயல்முறை பட்டறை பாடநெறி, தனிப்பட்ட கணினி செயல்பாட்டு நிலை போர்-விளையாட்டு மீதான கட்டளை மற்றும் கட்டுப்பாடு, அடிப்படை பயில்வளல் பாடநெறி - இந்தியா, இளம் அதிகாரிகள் பாடநெறி- பாகிஸ்தான், அதிகாரிகளின் ஆயுதப் பாடநெறி- பங்களாதேஷ், கனிஷ்ட கட்டளைப் பாடநெறி- இந்தியா, இராணுவ கண்காணிப்பு பாடநெறி கென்யா, ஐக்கிய நாடுகளின் அமைதி ஆதரவு செயல்பாட்டு பயிற்சி பாடநெறி- பங்களாதேஷ், மற்றும் உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி – இந்தியா ஆகிய பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.

மேலும், இந்தியாவில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலை முகாமைத்துவ கற்கை, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் வெளிநாட்டில் பணிபுரியும் பாதுகாப்பு இணைகள் / ஆலோசகர்களுக்கான பயிற்சித் திட்டம் போன்ற உயர் கல்விகளையும் கற்றுள்ளார்.