Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2023 20:30:10 Hours

கஜபா படையணியின் ஸ்தாபக தந்தையின் 31வது ஆண்டு நினைவு

விலைமதிப்பற்ற உயிரையும் தியாகம் செய்த ஸ்தாபக தந்தை மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் சமகாலத்தின் புகழ்பெற்ற போர் வீரர் 1992 ஓகஸ்ட் 8 அன்று யாழ். அராலி முனை வழியாக பயணித்த போது எல்ரீரீஈ இன் கண்ணிவெடியில் உயரிழந்த அவரது குழுவினரான மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 31 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 8) அனுராதபுரம் சாலியபுர கஜபா படையணியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, வீரமரணம் அடைந்த போர்வீரர் மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு சாலியபுர நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியின் வருகையின் பின்னர் சாலியபுரவில் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.தேசிய கீதம் மற்றும் கஜபா படையணியின் கீதம் இசைக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி, வீரமரணம் அடைந்த போர் வீரருக்கு அஞ்சலி செலுத்துதல், மலர் வைத்தல், ரீவீல் ஆகியன சாலியபுர நினைவேந்தல் நிகழ்வுகளை நிறைவு செய்தன.

கஜபா படையணியின் இசைக்குழுவின் இன்னிசைகளுக்கு மத்தியில், கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மற்றும் கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்டிடபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு முறையான இராணுவ மரியாதைகள் வழங்கப்படுவதற்கு முன்பு அவரது பொன்னான நினைவுக்கு வணக்கம் செலுத்தினர்.

மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜிஎச் ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கொமான்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கொமான்டர் சீபி விஜேபுர, மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்கிரமசிங்க ஆகியோர் 1992 ஓகஸ்ட் 8 அன்று யாழ். அராலி முனை வழியாக பயணித்த போது எல்ரீரீஈ இன் கண்ணிவெடி தாக்குதலில் பலியானவர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் படையணி தலைமையக பிரதி தளபதி கேணல் கேஆர் களுபஹன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், 7 வது கஜபா படையணியின் இராணுவ வீரர் மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்னவின் அகால மறைவுக்கு முன்னதாக அவரது சொந்த ஊரான கிரிபத்கொட மாகொலவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இராணுவ தலைமையகத்தின் இராணுவ காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெனாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் முதல் மலர் வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த போர் வீரரின் நினைவுக்கு மரியாதை செலுத்தினார்.