Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2023 06:00:47 Hours

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் தீ விபத்து வன்னி படையினரால் அணைப்பு

இன்று (4) பிற்பகல் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 02 அதிகாரிகள் உட்பட 30 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் கொண்ட குழுவினர் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கட்டிடங்கள் மற்றும் அதனை அன்டிய பிரதேசங்களில் தீ பெரும் அழிவை ஏற்படுத்தும் முன் அதனை கட்டுப்படுத்துமாறு 9 வது விஜயபாகு காலாட் படையணியினருக்கு கட்டளையிட்டார்.

573 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 9 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள உறுப்பினர்களின் உதவியுடன் தண்ணீர் பவுசர்கள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுத்த படையினரின் நடவடிக்கையை பல்கலைக்கழக அதிகாரிகள் பாராட்டினர்.