Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2023 22:26:42 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி

இராணுவ படையணிகளுக்கு இடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி-2023 இன் இறுதிப் போட்டி, வெள்ளிக்கிழமை (04) மாலை பனாகொட இராணுவ ரக்பி மைதானத்தில் ரக்பி ரசிகர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இப் போட்டிக்கான பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவ பதவி நிலைப்பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ சீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ, விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் இராணுவ ரக்பி குழுவின் தலைவர் ஆகியோர் வருகை தந்த இராணுவ தளபதியை வரவேற்றனர்.

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி ஆகியவற்றின் வீரர்களுக்கு இடையே ஆடவர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில், 19 - 17 மதிப்பெண்களுடன் இராணுவ பொது சேவை படையணி வீரர்களுக்கு சாம்பியன்ஷிப் வெற்றி கிடைத்தது.

படையணிகளுக்கிடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியின் (பெண்கள்)-2023 இறுதிப் போட்டியும் அதே நாளில் பனாகொட இராணுவ ரக்பி மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவ பொது சேவை படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் 17 - 05 புள்ளிகளுடன் இலங்கை இராணுவ பொது சேவை படையணி வீராங்கனைகள் முதலாம் இடத்தையும் இலங்கை இராணுவ மகளிர் படையணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

இராணுவ ரக்பி குழுவின் வழிகாட்டுதலின்படி, ஆண்கள் பிரிவில் பதினாறு படையணிகளும் பெண்கள் பிரிவில் ஐந்து படையணிகளும் போட்டியில் பங்கு பற்றினர். 9 ஜூன் 2023 அன்று இராணுவ பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் போட்டிகள் ஆரம்பமானது.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே வெற்றியாளர்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி வீரர்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினார். இரண்டாம் இடம், மற்றும் ஏனைய வெற்றியாளர்களுக்கான பரிசுகள் மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராக இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டிஜிசிஎல் ஜயவிக்ரம அவர்களும், பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிப்பாய் கேஏஎன் காந்தவ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 2023 பெரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 மற்றும் காமன்வெல்த் சிரேஷ்ட, கனிஷ்ட இளைஞர் சாம்பியன்ஷிப் - 2023 இந்தியா ஆகிய போட்டிகளில் வெற்றியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை இராணுவத் தளபதி அதே சந்தர்ப்பத்தில் வழங்கியதுடன், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

நிகழ்வின் இறுதியில், இராணுவ ரக்பி குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மத்தியில் ரக்பியின் புகழ், இராணுவ விளையாட்டில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதுடன், நற்பெயரையும் பெற்றுள்ளது. இதுவரை சேவை மற்றும் தேசிய மட்டங்களில் சாதனைகளையும், தொடர் வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள போட்டியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

மேற்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, உபகரண கட்டுப்பாட்டாளர் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பெரும் திரளானோர் உற்சாகமான நிகழ்வுகளைக் கண்டுகளித்தனர்.

படையணிகளுக்கு இடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி-2023 இன் சாதனைகள் பின்வருமாறு:

ஆண்கள் முதலாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணம் - இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி

ஆண்கள் இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணம் - இராணுவ பொது சேவை படையணி

ஆண்கள் மூன்றாம் இடம் - கஜபா படையணி

பெண்கள் முதலாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணம் - இராணுவ பொது சேவை படையணி

பெண்கள் இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணம் - இலங்கை இராணுவ மகளிர் படையணி

பெண்கள் மூன்றாம் இடம் - இலங்கை பொறியியல் படையணி

ஆண்களுக்கான சிறந்த ரக்பி வீரர் - இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டிஜிசீஎல் ஜயவிக்ரம

பெண்களுக்கான சிறந்த ரக்பி வீராங்கனை - இராணுவ பொது சேவை படையணியின் பெண் சிப்பாய் கேஏஎன் காந்தவ