Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2023 19:35:54 Hours

தளபதி பிரதம விருந்தினராக நாயக்க தேரோவிற்கு "அக்தபத்ர" பரிசளிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேற்கு சங்க நாயகத்தின் பிரதான சங்க நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பேலியகொட ஜயதிலகராம விகாரையின் பிரதமகுரு வண. கெட்டபேரிகந்த ரதனசிறி தேரருக்கு "அக்தபத்ர" (நியமனச் சட்டம்), 'விமலசிறி வன்ஷாலங்கார தர்மகீர்த்தி ஸ்ரீ' என்ற கெளரவப் பட்டம் மற்றும் "அக்கமஹாசத் தம்ம ஜோதிக தஜ" என்ற கௌரவப் பதவியும் வழங்கிவைத்தார்.

பேலியகொட ஜயதிலகராம விகாரை வளாகத்தில் அமரபுர மகா சங்க சபையின் பதில் மகா நாயக்கர் வண. உயங்கொட மைத்திரி மூர்த்தி நாயக்க தேரர் தலைமையில் வைபவம் இடம்பெற்றது.

லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மியான்மர் தூதரகத்தின் மனிதவள முகாமைத்துவ ஆலோசகர் திரு. தா து, நாயக்க தேரருக்கு "அக்கமஹா சத் தம்ம ஜோதிக தஜ" "அக்தபத்ர"வை வழங்கினார்.

மகா சங்கத்தினர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, 141 வது காலாட் பிரிகேட் தளபதி எல்ஜிபி காரியவசம் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.