Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2023 22:22:53 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் உதய குமார இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கேஏஏ உதய குமார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 34 வருடங்களுக்கும் மேலான பணியின் பின், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவ தளபதி காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) சந்தித்தார்.

ஓய்வுபெறும் இலங்கை பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரியுடனான சிநேகபூர்வ சந்திப்பின் போது இராணுவத் தளபதி, அவரது அர்ப்பணிப்பான சேவைகள் மற்றும் சவாலான பொறுப்புகளை தவறாமல் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையுடன் செய்தமைக்காக அவரைப் பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியின் போது விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் பணிகளையும் மற்றும் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் அவர் தனது கடமைகளை திறம்பட ஆற்றியதன் நினைவுகளையும் அவர் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் கேஏஏ உதய குமார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் பதிலுக்கு இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், தளபதி தனது பணிகளை நிறைவேற்றுவதில் அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்தார். இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை பாராட்டினார். போரில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ரண சுர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னமும் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் கேஏஏ உதய குமார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 1989 ஜனவரி 20 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். மேலும் அவர் 1990 ஒக்டோபர் 05 இலங்கை பொறியியல் படையணியின் இரண்டாம் லெப்டினன் நிலைக்கு நியமிக்கப்பட்டதுடன், தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார். அவர் 2022 பெப்ரவரி 04 மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி காரியாலயத்தில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியாக பதவி வகிக்கிறார். இலங்கை பொறியியல் படையணியின் 1வது களப் இலங்கை பொறியியல் படையணியின் குழு தளபதி, 22 வது காலாட் படைப்பிரிவின் பொறியியல் படைப் பொறுப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 7 வது களப் பொறியியல் படையணி மற்றும் 8 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட நிறுவனத்தின் அமைதி ஆதரவு செயற்பாடுகள் நிலையத்தின் பணிநிலை (பயிற்சி) அதிகாரி 2, ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் இலங்கை படைக்குழுவின் களப் பொறியியல் அதிகாரி, 6 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, பொது பணிநிலை அதிகாரி I (செயல்பாடுகள்), நடவடிக்கை கட்டளை கொழும்பு, 1 வது கள பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அமைதி காக்கும் விவகார அதிகாரி - நியூயார்க், பயிற்சி பணிப்பகத்தின் கேணல் பயிற்சி, இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் செயலாளர், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி, இராணுவத் தளபதியின் இராணுவ உதவியாளர், ஆளனி நிர்வாக பணிப்பாளர் நாயகம், இராணுவ தடகளக் குழுவின் பிரதித் தலைவர், இராணுவ ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட் குழுவின் தலைவர், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப்பிரதானி அலுவலகத்தின் பதவி நிலைப் பிரதானி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கேஏஏ உதய குமார ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ யுஎஸ்ஏடபிள்யூசி பீஎஸ்சி அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பின்பற்றியுள்ளார், படைக்குழு கட்டளையாளர் தந்திரோபாய பாடநெறி, பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, அதிகாரிகள் தொழில் துறை நிர்வாக பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, மனிதநேய பயிற்சி மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் முகாமைத்துவ பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆயுதப்படை அதிகாரிகளுக்கான உயர் பாடநெறி, ஆயுதப்படைகளுக்கான ஆயுத மோதல் சட்டம் குறித்த பயிற்றுவிப்பாளர்களுக்கான உயர் பாடநெறி. இளம் அதிகாரிகள் பாடநெறி – இந்தியா, அதிகாரிகள் பூமியில் நகரும் ஆலை, பணிமனை மற்றும் கட்டுமான ஆலை பாடநெறி- இந்தியா, சேவை பயிற்சி பாடநெறி பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்- இந்தியா, ஐக்கிய நாடுகளின் வளங்கல் அதிகாரிகளின் பாடநெறி- நோர்வே, சர்வதேச மனிதாபிமான சட்டம் பற்றிய பாடநெறி- இத்தாலி மற்றும் ஐக்கிய நாடுகளின் இராணுவ போர் பயிற்சி கல்லூரி பாடநெறி- அமெரிக்கா ஆகிய பாடநெறிகளை பின்பற்றியுள்ளார்

மேலும், சிரேஷ்ட அதிகாரி பல உயர்கல்வி மற்றும் இராணுவம் அல்லாத தகைமைகளான களனி பல்கலைக்கழகத்தில் முதுகலை பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள், மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைகள் டிப்ளோமா, இலங்கை அமெரிக்கா இராணுவப் போர் போன்றவற்றைப் படித்துள்ளார். இலங்கை அமெரிக்கா இராணுவ போர் கல்லூரியில் கல்லூரி டிப்ளோமா, கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்சி பாடநெறி, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறிமுறை போன்ற தகைமையகளையும் பெற்றுள்ளார்.