Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2023 20:25:51 Hours

மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வியாழக்கிழமை (27) சந்தித்தார்.

இக்கலந்துரையாடல்களின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் நட்பு ரீதியிலான நல்லுறவுகளையும், குறிப்பாக பல்வேறு பயிற்சித் திட்டங்களில் படையினர்களின் பங்கேற்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றம் தொடர்பான தற்போதைய பரிமாற்றத் திட்டங்களையும் இருவரும் நினைவு கூர்ந்தனர்.

நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் சுமுகமான சந்திப்பு நிறைவுற்றது. பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் மாலைதீவு குடியரசு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் எல்டிசீ ஹசன் அமீர் அவர்களும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.