24th July 2023 18:13:43 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 681 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினர், இராணுவத்தின் தற்போதைய வீடு நிர்மாணப் பணிகளில் ஒன்றாக வடக்கில் பின்தங்கிய குடும்பம் ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 21) நடைபெற்ற விழாவின் போது வீடு கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நல்லெண்ணத்தின் அடையாளமாக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பின் மூலம் ஆனந்தபுரத்தில் வசிக்கும் திரு. எஸ் புனிதவலன் மற்றும் வளையார்மடம் திரு. எம்பி எண்டன் ஆகியோர் இணைந்து இத்திட்டத்திற்கு 2 மீல்லியன் ரூபா அனுசரணையை வழங்கியுள்ளனர்.
உடையர்கட்டு சுதத்திபுரம் காலனியில் வசிக்கும், திருமணமாகி ஒரு மகளைக் கொண்ட கூலித்தொழிலாளியான திரு விஜயகுமார் தனுஷன், பொருளாதாரக் கஷ்டங்களுக்கு உள்ளாகி, சரியான தங்குமிடம் இல்லாமல் இருந்துள்ளார். இதனை கவனத்தில் கொண்ட படையினர் அவரின் கஸ்ட நிலமையை கவனத்தில் கொண்டு இந்த வீட்டினை நிர்மாணித்து கொடுத்தனர். இவர் ஒரு சிறிய குடிசையில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் அவநம்பிக்கையான வாழ்க்கை நிலை 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், தகுதியான குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பதற்கான மூலப்பொருட்களையும் நன்கொடையாளர்களையும் தேடுவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. நன்கொடையாளர்கள் தேவையான வளங்கள் மற்றும் மூலப்பொருட்களை வழங்கிய பின்னர் இரண்டு மாதங்களுக்குள் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.
9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் தங்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி தகுதியான குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர். நடைபெற்ற சமய நிகழ்வில் புதிய வீட்டின் சாவி கையளிக்கப்பட்டதுடன், பதாதை திறை நீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உடையார்கட்டு உதவி பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 681 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், உறவினர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.