Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2023 22:16:41 Hours

மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கான சமன் தேவாலயம் திறந்து வைப்பு

ஜனாதிபதி பணி குழு பிரதானியும் தேசிய பாதுகாப்பிற்கான சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க அவர்களுடன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் இணைந்து விசேட தேவையுடைய பக்தர்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரத்தினபுரி ஸ்ரீ சுமன சமன் தேவாலயத்தை ஞாயிற்றுக்கிழமை (23) காலை திறந்துவைத்தார்.

பஸ்நாயக்க நிலமே மற்றும் சமன் தேவாலய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில், 6 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் 265 அடி நீளமான கட்டிடத்தை இரண்டு மாதங்களுக்குள் நிர்மாணித்தனர். படையினரால் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கிய அதே வேளையில் தேவையான மூலப்பொருட்களை சமன் தேவாலய அதிகாரிகள் மற்றும் இரத்தினபுரி லயன்ஸ் கழகம் 306 C/2 வழங்கினர்.

மேலும், படையினர் கிரானைட் ஓடுகள் பதித்ததோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையுடன் ‘போதி மலுவவைச் சுற்றி ஒரு தடுப்புச் சுவரையும் நிர்மாணித்தனர்.

சமன் தேவாலய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி பணி குழு பிரதானியும் தேசிய பாதுகாப்பிற்கான சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க அவர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை பெறுவதற்காக இராணுவத்தை நாடியதை அடுத்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 6 வது பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி நிர்மாணப்பணிகளை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.

திரு.சாகல ரத்நாயக்க மற்றும் இரத்தினபுரி இன்டர்நேஷனல் லயன்ஸ் கழக அதிகாரிகள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், படையினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட சிறந்த பணியைப் பாராட்டினர். மேலும், இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை பாராட்டி தேவாலய அதிகாரிகள் விழாவிற்கான பிரதம அதிதியான திரு.சாகல ரத்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகிய இருவருக்கும் விசேட நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.

இக்கட்டிடத்தை திரைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், இராணுவத்தின் சில ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் முதியவர்கள் வழிப்பாட்டிற்காக ஸ்ரீ சுமன சமன் தேவாலயத்தை அடைந்தனர்.

இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள மகாசங்கத்தினர், 61 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பிரதேச அரச அதிகாரிகள், இரத்தினபுரி இன்டர்நேஷனல் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.