Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2023 21:44:14 Hours

இராணுவ த் தளபதி 1 வது இலங்கை ரைபிள் படையணிக்கு விஜயம் கலந்துரையாடல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வியாழன் (20) அன்று மாத்தளையில் இலங்கை இராமஞ்ஞ மகா பீடத்தின் 73 வது ‘உபசம்பத்தா வினய கர்மா’ (உயர் நியமனம்) ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற பின்னர் பல்லேகலையில் உள்ள 1 வது இலங்கை ரைபிள் படையணி முகாமுக்கு நிமித்தமாக விஜயம் செய்தார்.

இராணுவ தளபதியை 1 வது இலங்கை ரைபிள் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம் ஆர் ஜயசிங்க அவர்கள் வரவேற்று அதிகாரிகளின் உணவறைக்கு அழைத்துச் சென்றார்.1 வது இலங்கை ரைபிள் படையணியின் கட்டளை அதிகாரி அவர்கள் தேநீர் விருந்துபசாரத்திற்கு முன் வருகை தந்த இராணுவத் தளபதிக்கு படையணியின் வகிப்பங்கு மற்றும் பணிகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து இராணுவத் தளபதி படையினரின் நலன் மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 1 வது இலங்கை ரைபிள் படையணி முகாமுடன் இணைந்திருக்கும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 810 வது பிரிவில் நடைபெற்று வரும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன், அவற்றை விரைவாக முடிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, 1 வது இலங்கை ரைபிள் படையணியின் படையினருடன் வசிக்கும் ‘ரைபிள்’ என்ற குதிரைக்கு பழங்களை ஊட்டினார். பின்னர், இராணுவத் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளையும் சில எண்ணங்களையும் பதிவிட்டார்.

பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம் ஜி டபிள்யூ டபிள்யூ எம் சி பி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச் ஆர் ஆர் வி எம் என் டி கே பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ,11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்துடன் இணைந்திருந்தனர்.