Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2023 13:45:07 Hours

புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி பதவியேற்பு

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிராதனியாக செவ்வாய்க்கிழமை (18) இராணுவ தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

பௌத்த தேரர்களின் செத் பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கடமை ஏற்றுக்கொண்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். மத அனுஷ்டானங்களின் இறுதியில் அவர் பௌத்த பிக்குகளுக்கு ‘பிரிகர’ மற்றும் ‘கிலன்பச’ வழங்கி வணக்கம் செலுத்தினார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2021 ஆம் ஆண்டு முதல் 21 மாதங்களுக்கும் மேலாக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக பணியாற்றினார்.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 4 வது கஜபா படையணியின் குழு கட்டளையாளராக நியமனம் பெற்றிருந்த போது மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 4 வது கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரியாக சேவையாற்றிய பெருமையைப் பெற்றிருந்தார். 2009 மே இறுதி யுத்ததின் போது மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 14 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் விவரம்

மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி கொட்டாவைவில் பிறந்தார். அவர் ஆரம்ப கல்வியினை கொட்டஹேன லூகஸ் கல்லூரியிலும் உயர் கல்வியை பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் கற்றார். அங்கு அவர் விளையாட்டு மற்றும் இணைபாட விதானத்தில் சிறந்து விளங்கினார். அவர் 1987 ஆம் ஆண்டு பயிலிளவல் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்தார். 1988 டிசம்பர் 10 இலங்கை இராணுவ காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியில் 2ம் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.

அவரது இராணுவ வாழ்க்கையில், அவர் 4 வது கஜபா படையணியின் குழு கட்டளையாளர், நிறைவேற்று அதிகாரி, கட்டளை அதிகாரியாவும், 16 வது கஜபா படையணியின் 2ம் கட்டளை அதிகாரி, 10 வது கஜபா படையணியின் 2ம் கட்டளை அதிகாரி உட்பட பல நியமனங்களை வகித்துள்ளார். நிர்வாக காலாட் பயிற்சி நிலையத்தின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), 524 வது காலாட் பிரிகேட் மேஜர், அநுராதபுரம் இடைத்தங்கல் முகாம் பணிநிலை அதிகாரி II, 14 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, ஓமந்தை நுழைவு/வெளியேற்றத்தின் கட்டளை அதிகாரி, கூட்டு சேவைகளில் கொத்மலை மொழிப் பயிற்சிப் பாடசாலையின் பணிநிலை அதிகாரி I, 64 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொது பணி, 11 வது காலாட் படைபிரிவின் நிர்வாகம் மற்றும் வழங்கல் அதிகாரி, 652, 662 மற்றும் 532 வது காலாட் பிரிகேட் தளபதி, மின்னேரிய காலாட் பயிற்சி நிலைய தளபதி, 23 மற்றும் 58 வது படைப் பிரிவின் தளபதி திங்கட்கிழமை (ஜூலை 17) வரை இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத்தளபதி, இலங்கை தேசிய ரயிபில் கழகத்தில் தலைவர், காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாகவும் பதவிகளை வகித்துள்ளார்.

போர்க்களத்தில் இவரின் துணிச்சலையும் பாராட்டி ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார். அதாவது படையலகு உதவி துப்பாக்கி பாடநெறி , பீரங்கி அவதானிப்பு பாடநெறி, படையலகு நிர்வாக பாடநெறி, பங்களாதேஷ், அதிகாரி துப்பாக்கி பாடநெறி, பங்களாதேஷ் இளங்கலை அதிகாரி பாடநெறி, இந்தியா கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் சிரேஷ்ட கட்டளை பாடநெறிகளை பின்பற்றியுள்ளார்.

இவர் திருமதி தீபரேகா ரணசிங்கவை மணந்து இரண்டு மகள்மார்களும் ஒரு மகனும் உள்ளனர்.