Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2023 13:56:14 Hours

அலகல்ல தேடுதலில் இராணுவ வீரர்களை பாராட்டி இராணுவ தளபதி பாராட்டு சின்னம் வழங்கல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அலகல்ல மலைத்தொடருக்கு அருகில் சடலமாக காணப்பட்ட காணாமல் போன டென்மார்க் சுற்றுலாப் பயணியை தேடும் நடவடிக்கையில் அயராது பங்குபற்றிய 11 வது காலாட் படைப்பிரிவின் ஐந்து இராணுவ வீரர்களின் விதிவிலக்கான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக இன்று (15) காலை இராணுவ தலைமையகத்திற்கு அழைத்து பாராட்டினார்.

தேடுதல் நடவடிக்கை மற்றும் பயணத்தின் போது அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து அந்த ஐந்து இராணுவ வீரர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் இராணுவ தளபதி அவர்களை பாராட்டி தளபதியின் சிறப்பு பாராட்டு சின்னங்களை அவர்களுக்கு அணிவித்தார். மத்திய பாதுகாப்பு படை தலைமையக 11 வது காலாட் படைப்பிரிவின் 2 வது (தொ) சிங்க படையணி படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான பங்கிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

வியாழன் (13) பிற்பகல் 3.00 மணியளவில் கண்டி அம்பிட்டிய பெக்பேக்கர்ஸ் விடுதி நிர்வாகத்தினர் புதன்கிழமை (12) டென்மார்க் நாட்டவரான (செல்வி) கார்ப் முன் கேப்சன் மலையேற்றத்திற்கு சென்று திரும்பாததால் கண்டி சுற்றுலாப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் குறித்த நபரை கண்டறியும் பொருட்டு 11 வது காலாட் படையினரின் உதவியை நாடியுள்ளனர். அதற்கேற்ப மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 11 வது காலாட் படைப்பிரிவு படையினர் உடனடியாக தேடுதல் பணியை தொடங்கினர்.

தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் (14) காலை அலகல்ல மலைத்தொடர் அடிவாரத்திற்கு அருகிலுள்ள இடத்திலிருந்து காணாமல் போனவரின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.