12th July 2023 18:55:06 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதன்கிழமை (12) ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு ஓய்வு பெறுவதன் நிமித்தம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்தில் புகழ்பெற்ற சேவையின் பின்னர் ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை தனது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இராணுவத்தில் 36 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து மதிப்புமிக்க காலாட்படை குடும்பத்தின் உறுப்பினராக பாராட்டுக்களையும் வாழ்துக்களையும் பெற்றுக்கொண்டார். மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட காலாட் படை அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியில் பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க பணிகள் தொடர்பான நினைவுகளை இராணுவத் தளபதி பகிர்ந்து கொண்டார்.
ஓய்வுபெறும் இராணுவப் பதவி நிலை பிரதானி மற்றும் அவரின் துணைவியார் ஆகியோருடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் தொடர்பாக கேட்டறிந்து, அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவரது தொழில் வாழ்க்கையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு அளித்த ஆதரவுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களும் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்தார். அதேவேளையில் அவர் அமைப்பில் சேவையாற்றிய காலத்தில் அவர் பெற்ற ஊக்கம் மற்றும் தோழமையைப் பற்றி குறிப்பிட்டார். சந்திப்பின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பரிசுடனான பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். பாடநெறி 26 இன் கீழ் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் நியமிக்கப்பட்டு இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். அவர் 2020 மே 14 மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.
அவர் ஓய்வுபெறும் போது இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானி மற்றும் இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். மேலும் முதலாவது இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் அணி கட்டளையாளர் மற்றும் 6 வது இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் அணி கட்டளையாளர், புலனாய்வு அதிகாரி, 6 வது இராணுவ இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மற்றும் நிறைவேற்று அதிகாரி, 11 வது காலாட் படைப்பிரிவின் பொதுப்பணி அதிகாரி 2 (நிர்வாகம்), இராணுவ இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் பயிற்சி பிரிவின் தலைமை பயிற்றுவிப்பாளர், 3, 8 மற்றும் 10 வது இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி அதிகாரி, இராணுவ தலைமையக திட்டப் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (திட்டங்கள்), 1 மற்றும் 7 வது இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி,கொழும்பு இலங்கை இளைஞர் படையணியின் பிராந்தியப் பணிப்பாளர், 23 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணி 1 (ஒருங்கிணைப்பு), 4 வது இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, 512, 523 மற்றும் 663 வது காலாட் பிரிகேட்களின் பிரிகேட் தளபதி, 21 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொது பணி, இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி, எயா மொபைல் பிரிகேட் தளபதி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, இராணுவத் தலைமையக ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் , 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, திருகோணமலை மாவட்ட கொவிட் - 19 பரவலை தடுப்பிற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி, இராணுவ மல்யுத்த குழுவின் தலைவர், கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவ விளையாட்டு கழகத்தின் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார். - பாகிஸ்தான், பங்களாதேஷ் கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் பணி நிலை பாடநெறி இந்தியா, சிரேஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறி ஆகிய பட்ட படிப்புகளை பின்பற்றியுள்ளார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுகலைப் பட்டம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் ஆய்வுகளில் முதுகலை அறிவியல் பட்டம் மற்றும் மைக்ரோசொப்ட் ஒபிஸ் 97 இல் இணையம் மற்றும் இ-மெயில் அறிவியல், நில தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் மின்னஞ்சல் கையாளுதல் பாடநெறியையும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.