11th July 2023 22:11:56 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவினர் வன்னிப் பொதுமக்களுடனான நல்லிணக்கம், ஒற்றுமை, நல்லுறவு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய இரண்டு மாடி நிர்வாகக் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தனர்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.சண்முகராஜா சுஜென், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் நடத்திய சந்திப்பின் போது, தமது சங்கத்தின் உத்தேச வர்த்தக வளாகத்தை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தைக் கோரினார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் இராணுவத் தளபதியின் ஆசிர்வாதத்துடன் 56 வது காலாட் படையினரிடம் பணியை ஒப்படைத்தது.
ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற நிகழ்வின் போது, சமய ஆசீர்வாதங்கள் மற்றும் சங்க உறுப்பினர்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பதாகையை திரைநீக்கம் செய்து, மங்கள விளக்கு ஏற்றி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் திரு.பி.அம்பாவில, வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர், 56 ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபிஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி மற்றும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள்.
அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு மண்டபம் மற்றும் அலுவலகப் கட்டிட வளாகம். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினர்களினால் இந்த திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்கியதுடன், வர்த்தகர் சங்கம் மூலப்பொருட்கள் கொள்வனவுக்கு அனுசரணை வழங்கியது.
இன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில், இலங்கை இராணுவப் படைகளின் வெற்றிக்காக வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவரால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சீடீ ரணசிங்க ஆர்டபி்ள்யுபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவருக்கு தனது அமைப்பு மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக தனியான நினைவுப் பரிசையும் வழங்கினர்.
வடமாகாண பிரதம செயலாளர் திரு.சமன் பந்துசேன, வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பீஏ சரத்சந்திர, வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.பீ அம்பவில, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.