Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2023 22:19:00 Hours

மூன்று பிள்ளைகளுடனான விதவை தாய்க்கு இராணுவத்தால் வீடு அன்பளிப்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேட் படையினர் மூன்று பிள்ளைகளின் விதவைத் தாயின் பரிதாப நிலையைக் கண்டறிந்து, கேகாலை மக்கள் வங்கி பிராந்திய தலைமையகம் இராணுவத்தினருக்கு வழங்கிய அனுசரணையில் ரம்புக்கனையில் அவர்களுக்கான புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

611 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் மற்றும் 8 வது கெமுணு ஹேவா படையணி படையினர் சரியான தங்குமிடமின்றி வாழ்ந்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி கேஏ நீலிமினி தில்ருக்ஷி, அவர்களுக்கு இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

இந்த மனிதாபிமான தேவை குறித்து 611 வது காலாட் பிரிகேட் தளபதிக்கு அறிவிக்கப்பட்டதும் மூலப்பொருட்களுக்கான உதவிக்காக கேகாலை மக்கள் வங்கியை அணுகினர். ரம்புக்கனை எரியகொட கிராம அலுவலர் பிரிவில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 611 வது காலாட் பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் வியாழக்கிழமை (ஜூலை 6) திறந்து வைக்கப்பட்டது.

கேகாலை மக்கள் வங்கியின் முகாமையாளர் பல வங்கி அதிகாரிகளுடன் கௌரவ அதிதியாக திறப்பு விழாவில் கலந்துகொண்டார். விழாவில், பயனாளிகளுக்கு பல தளபாடங்கள், பரிசு பொருட்கள் மற்றும் சில அத்தியாவசிய பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன.

மக்கள் வங்கி தனது 62 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மனிதாபிமான தேவையை நிறைவேற்ற முன்வந்தது. பால் பொங்கும் சடங்கு, மத சடங்குகள் ஆகியவற்றுடன், புதிய வீட்டின் சாவியின் அடையாளப் பிரதியை குடும்பத்தினருக்கு இந்நிகழ்ச்சியில் வழங்கி வைத்தனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆடபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் நாடு முழுவதிலும் தேவையுடையோருக்கான இராணுவத்தின் தற்போதைய வீடு நிர்மாணத் திட்டங்களுடன் தொடர்பில் இருந்ததோடு, நிலவும் பொருளாதார தடைகள் காரணமாக அதற்குத் தீவிரமாக ஆதரவளிக்குமாறு அனைத்து சிப்பாய்களுக்கும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது, அனைத்து இராணுவ வீரர்களுக்கும், பிரதம விருந்தினர் மற்றும் அந்தந்த தளபதிகளால் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.