10th July 2023 23:00:45 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் முதலாவது உபகரணங்களின் ஆய்வு 16 ஜூன் 2023 அன்று லெபனான், கிரீன்ஹில், நகோராவில் ஸ்ரீ தள முகாம் வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைப் பாதுகாப்பு படை குழுவிற்கு இலங்கை அதிகாரிகளால் வழங்கப்பட்ட உபகரணங்களின் சேவைத்திறனை மதிப்பிடுவதும், அரசாங்கத்திற்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஐ.நாவினால் வகுக்கப்பட்ட தொடர்ச்சியான செயல்திறன் தரங்களை உறுதிப்படுத்துவதும், இலங்கை லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் உபகரணங்களை லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் நிலைநிறுத்துவதும் காலாண்டு ஆய்வின் நோக்கமாகும்.
கொள்கலன்கள், போர் வாகனங்கள், ஆதரவு வாகனங்கள்-வணிக முறை, ஆதரவு வாகனம்-இராணுவ முறை, ஆயுதங்கள், வெடிமருந்துகள், தளபாட உபகரணங்கள் மற்றும் தற்காப்பு உள்ளிட்ட முக்கிய உபகரணங்களின் தொகுப்பு, அரசாங்கத்தின் தலைமையிலான குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டது. இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் வழங்கல் அதிகாரி, திரு. வோலோடிமிர் ஒலேகா ஒவ்வொரு பணிக்காகவும் நியமிக்கப்பட்டுள்ள 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் அனைத்து அதிகாரிகளுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஈடுபட்டார்.