07th July 2023 21:17:51 Hours
யாழ் குடாநாட்டு இராணுவப் படையினர் அனுசரணையாளர்களின் ஆதரவுடன் வறுமையில் வாழும் வடமாகண மக்களுக்கு வீடமைக்கும் திட்டத்தின் கீழ் உரும்பிராயில் நிர்மாணிக்கப்பட்ட 770 வது வீடு செவ்வாய்க்கிழமை (2023 ஜூலை4) பயணாளிக்கு கையளிக்கப்பட்டது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் 511 வது காலாட் பிரிகேடின் 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் மேஜர் ஏடிஎஸ்டி அத்துகோரல அவர்கள் இதனை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தை வழங்கினர். கனடாவில் வசிக்கும் மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கத்தின் (ஓய்வு) ஒருங்கிணைப்பின் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த திருமதி ஹெய்லி மேடிசன், திரு டேனியல் மிலன் பாலராஜ் மற்றும் 'வன்னி எய்ட் ஒப் கனடா' அமைப்பு இணைந்து இத்திட்டத்திற்கான நிதியுதவி வழங்கினர்.
உரும்பிராய் பயனாளிகளான திரு.திருமதி.சந்தீப விமலகரன் அவர்களின் புத்திசாலி பிள்ளைகள் கல்வி கற்கும் கோண்டாவில் ராமகிருஷ்ணா கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசியர்கள் இவர்களின் நிலைமை குறித்து இராணுவத்திற்கு அறியத்தந்தனர். அந்தக் பிள்ளைகளின் தந்தை சில காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் இந்த குடும்பத்திற்கு பொருத்தமான வீட்டினை தாய்க்கு சொந்தமன உரும்பிராய் காணியில் கட்டப்பட்டது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசீர்வாதத்துடன் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபீ வெலகெதர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களுடன் கலந்தாலோசித்து, 2023 மார்ச் 8 ஆம் திகதி அடிக்கல்லை நாட்டி நான்கு மாதங்களுக்குள் திட்டத்தை நிறைவு செய்யும் பொறுப்பை படையினர் ஏற்றுக்கொண்டனர்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளி, பயனாளியின் உறவினர்கள், கிராமவாசிகள் மற்றும் அழைப்பாளர்களுடன் இந்து மத சடங்குகளின்படி புதிய வீட்டை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் போது யாழ்.தளபதி அவர்கள் அந்த குடும்பத்திற்கு அடையாள திறவுகோல், பல வீட்டுப் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கினார். யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, பொலிஸ் அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேசத்தின் அரச அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.