Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2023 05:50:29 Hours

ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கான புதிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள, இலங்கை தூதரகத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டன் எஸ்ஆர் ஜயரத்ன அவர்கள் வெள்ளிக்கிழமை (30) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

நியமனம் பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த இராணுவத் தளபதி, நியமனத்தின் முக்கியத்துவத்தையும், நாட்டின் சிறந்த நலன்களுக்காக இராஜதந்திரியாக ஆற்றக்கூடிய பாத்திரங்களையும் சுட்டிக் காட்டினார்.

இந்த சுமூகமான சந்திப்பின் போது இராணுவத் தளபதி, அவருக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.