Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2023 22:04:52 Hours

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மாலி செல்லும் மினுஸ்மா ஐ.நா பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியை சந்திப்பு

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ, ஐ.நா அமைதி காக்கும் ஒருகிணைப்பு பிரிவின் தளபதி கேணல் எஸ்டபிள்யூபீஎம்எச்ஆர் சேனாதீர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகிய இருவரும் இணைந்து மாலி ஐ.நா அமைதி காக்கும் - பீ1 குழுவை சந்திக்க மாலிக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

ஐநா செயலாளரின் விஷேட பிரதிநிதியும் ஐ.நா அமைதி காக்கும் ஒருகிணைப்பு பிரிவின் பிரதானியுமான திரு எம் எல் காசிம் வனி அவர்களின் அழைப்பின் பேரில் திங்கட்கிழமை (ஜூன் 26) இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விஜயத்தை மேற்கொண்ட பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் மாலியின் அதிரடிப் படைத் தளபதி, பணிப் பொறுப்பாளர் மற்றும் ஊடகத் தலைவர் மற்றும் இலங்கை ஐ.நா அமைதி காக்கும் பணியின்-பி1 இன் திட்டமிடப்பட்ட புதிய வரிசைப்படுத்தல் தொடர்பாக முறையான கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது மாலியின் நிலப்பரப்புகளில் அமைதி காக்கும் வீரர்களை நியமிப்பது மற்றும் ஐ.நா அமைதி காக்கும் ஒருகிணைப்பு பிரிவின் அடிப்படை உண்மைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற் கொண்டனர்.

இலங்கையின் ஐ.நா அமைதி காக்கும் பணியின்-பி1 குழுவானது 22 இராணுவ அதிகாரிகள் மற்றும் 243 சிப்பாய்களை உள்ளடக்கியுள்ளதுடன், அவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்கும் முன்னரே அவர்களது பயிற்சியை நிறைவுசெய்துள்ளனர்.

அங்கு வருகை தந்த பொதுபணி பணிப்பாளர் நாயகம் அவர்களை ஐ நா அமைதி காக்கும் ஒருகிணைப்பு பிரிவினர் மரியாதையுடன் வரவேற்றனர்.

இக் கலந்துரையாடலில் ஐ.நா அமைதி காக்கும் ஒருகிணைப்பு பிரிவின் பீ1 தளபதி கேணல் எஸ்டபிள்யூபீஎம்எச்ஆர் சேனாதீர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 4 வது ஐ.நா அமைதி காக்கும் பணியின் வழங்கல் அதிகாரி லெப்டினன்ட் கேணல் எஸ்எம் பண்டாரநாயக்க மற்றும் 4 வது ஐ.நா அமைதி காக்கும் பணியின் வழங்கல் மற்றும் போக்குவரத்து அதிகாரியான லெப்டினன்ட் கேணல் எச்எம்டபிள்யூஆர் ஹேரத் ஆகியோரும் இணைந்திருந்தனர்.