Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd June 2023 20:00:23 Hours

கிழக்கு படையினரின் ஒத்துழைப்பில் புதிய வீடு

மனித நலனில் அக்கறை காட்டும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர், அமெரிக்காவில் வசிக்கும் திரு. ரொஷான் ராஜப்பாவின் அனுசரணையுடன், பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியின் ஒருங்கிணைப்பின் மூலம் கல்லடி, மாவடிச்சேனைப் பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர். பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா புதிய வீட்டை புதன்கிழமை (ஜூன் 21) நிகழ்வின் போது பயனாளிக்கு கையளித்தார்.

24 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானப் பணிகளுக்காக இராணுவ வீரர்களின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தை வழங்கினர்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் இத் திட்டத்திற்கான வழிகாட்டலை வழங்கியதுடன், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் 222 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் திட்டமிட்டபடி வீட்டை நிர்மானித்து முடித்தனர்.

இந் நிகழ்வின் போது 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால் முறையான வீடில்லாத தாயாரான திருமதி சிவகுமார் ராமசித்தாவிடம் வீட்டு சாவிகள் அடையாளமாக கையளிக்கப்பட்டது.

பயனாளிக்கு ரூபா 120,000.00ம் பெறுமதியான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சுமார் ரூபா 50,000.00ம் பெறுமதியான தளபாடங்கள் இராணுவ நலன்புரி பணிப்பகத்தினால் வழங்கப்பட்டது. திரு. ரோஷன் ராஜப்பா 48,000.00ம் ரூபாவும், 24 வது விஜயபாகு காலாட் படைப்பிரிவு படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் சேருவில மங்கள ரஜமஹா விஹாரை பிக்குகள் மற்றும் வர்த்தக சமூகத்தினரால் 30,800.00ம் ரூபாவும் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

222 வது காலாட் பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி, 222 வது காலாட் பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், 22 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீடு வழங்கும் விழாவில் பங்குபற்றினர்.