20th June 2023 14:30:59 Hours
65 வது காலாட் படைபிரிவின் தளபதியான கெமுனு ஹேவா படையணியின் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஈஏடிபி எதிரிசிங்க, ஓய்வுபெறுவதை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று (ஜூன் 20) காலை விஜயம் செய்தார்.
காலாட் படை அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது வெளியேறும் சிரேஸ்ட அதிகாரியின் விலைமதிப்பற்ற பங்களிப்பு மற்றும் வகிபங்கு பற்றிய நினைவுகளைப் புதுப்பித்ததுடன் இராணுவத் தளபதி, மே 2009 க்கு முன் மற்றும் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் அவரது குறிப்பிடத்தக்க சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையுடன் அவரது பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றியமை தொடர்பில் பாராட்டினார்.
34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ஈஏடிபீ எதிரிசிங்க, இராணுவத் தளபதி அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், பல்வேறு நியமனங்கள் மற்றும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி அவருக்கு எப்போதும் வழங்கிய வழிகாட்டலுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி வீட்டை விட்டு வேறு இடங்களில் தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவைப் இராணுவத் தளபதி பாராட்டினார்.
சந்திப்பின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஈஏடிபீ எதிரிசிங்க அவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார். அத்துடன் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசில்களையும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் ஈஏடிபீ எதிரிசிங்க பீஎஸ்சி 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 05 அக்டோபர் 1990 இல் கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் அடுத்தடுத்த நிலை உயர்வுகளின் பின்னர் அவர் 2021 ஆகஸ்ட் 02, அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
அவர் ஓய்வுபெறும் போது கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியாகவும் 65 வது காலாட் படைபிரிவின் தளபதியாகவும் பதவி வகித்தார். நியமிக்கப்பட்டுள்ளார். கெமுனு ஹேவா படையணியின் 1 மற்றும் 8 ஆவது படையணிகளின் அணி பொறுப்பாளர், 8 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரி பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பொதுப் பணி நிலை அதிகாரி 2 (பயிற்சி) படையணி தலைமையக நிறைவேற்று அதிகாரி, செயற்பாட்டு மற்றும் பயிற்சி அதிகாரி, 6 ஆவது கெமுனு ஹேவா படையணி பயிற்சி அதிகாரி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி குழு கொறுப்பதிகாரி,கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 25 ஆவது படையணி கட்டளை அதிகாரி, இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் கனிஸ்ட கட்டளை பாடநெறி பயிற்சி பொறுப்பதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி கல்வி பீட பணிப்பாளர், 533, 563 மற்றும் 112 வது காலாட் பிரிகேட்டுகளின் தளபதி மற்றும் - கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் பிரதானி ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.
சிரேஸ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்களை பின்பற்றியுள்ளார். அதாவது படைக் குழு கட்டளையாளர் பாடநெறி, தந்திரோபாய பாடநெறி, இளம் அதிகாரி பாடநெறி, அலகு நிர்வாகப் பாடநெறி, மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைச் சட்ட அடிப்படை பயிற்றுவிப்பாளர் பயிற்சி, இராணுவ கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் பாடநெறி, இளம் அதிகாரிகளின் பாடநெறி -இந்தியா, கனிஸ்ட கட்டளை பாடநெறி -இந்தியா மற்றும் காலாட் படையலகு கட்டளையாளர் பாடநெறி - ரஷ்யா.
ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுகலை பட்டம் இளங்கலை (ஹானர்ஸ்), (பாதுகாப்பு ஆய்வுகள்) போன்ற தனது 34 ஆண்டுகால புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பின்வரும் பட்டங்களைப் படித்து உயர் கல்வித் தகுதிகளைப் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகம், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் நிபுணத்துவ இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களுக்கான டிப்ளோமா, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்பித்தல் சான்றிதழ், ஹுவாகியாவோ பல்கலைக்கழகத்தில் கடல்சார் நாடுகளைச் சேர்ந்த திறமையாளர்களுக்கான மேம்பட்ட பயிற்சித் திட்டம் -சீனா, ஜிஐஎஸ் மற்றும் முறைமை தொடர்பான உயர்தர சான்றிதழ் பாடநெறி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் கற்கின்றார்.