Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2023 16:27:37 Hours

64 வது படைப்பிரிவின் தளபதி 17 வது (தொ) கஜபா படையணிக்கு விஜயம்

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எசச்டிடபிள்யூகேஎன் எரியாகம ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ அவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) அவரது கட்டளையின் கீழ் உள்ள 17 வது (தொ) கஜபா படையணியினருக்கு இலங்கை இராணுவத்தின் தற்போதைய மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் 'முன்னோக்கி செல்லும் வழி' பற்றி கருத்துரைத்தார்.

படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், 17 வது (தொ) கஜபா படையினரின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் படையணியின் வளர்ச்சியினை நிலை நிறுத்துவதற்கு அவர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.