Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2023 19:36:04 Hours

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 22 வது காலாட் படைப்பிரிவிற்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு, அதன் கீழ் உள்ள காலாட் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கும் 2023 ஜூன் 16-17 வரை தனது விஜயத்தை மேற்கொண்டார்.

தனது முதலாவது விஜயத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 16) 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம், 221 வது காலாட் பிரிகேட், 20 வது கஜபா படையணி மற்றும் 2 (தொ) கஜபா படையணி ஆகியவற்றிக்கு விஜயம் செய்ததுடன் மறுநாள் (ஜூன் 17) 223 வது காலாட் பிரிகேட், 222 வது காலாட் பிரிகேட், 5 வது இலங்கை பீரங்கி படையணி, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 24 வது விஜயபாகு காலாட் படையணிக்கும் விஜயம் செய்தார்.

விஜயம் செய்த சிரேஷ்ட அதிகாரிக்கு அந்தந்த தலைவர்கள் அவர்களது அமைப்புகளின் வகிபங்கு மற்றும் பணிகள் குறித்து விரிவாக விளக்கியதுடன், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றினார்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் தனது விஜயத்தின் போது புனித சேருவில விகாரையை தரிசனம் செய்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் விஜயத்தின் போது 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி, காலாட் பிரிகேட் தளபதிகள், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.