Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2023 23:52:24 Hours

இராணுவ பொலிஸ் படைத் தளபதி வடக்கு படையினரை சந்திப்பு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் ஒழுக்க பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) கிளிநொச்சி 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கும் முல்லைத்தீவு 6 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கும் விஜயம் செய்தார்.

வருகை தந்த சிரேஸ்ட அதிகாரிக்கு நுழைவாயிலில் அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அங்கு அவருக்கு பாதுகாவலர் அறிக்ைகயிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் இரு இடங்களிலும் பல படங்கள் எடுப்பதற்கு முன்பு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.

மேலும், அவர் இரு முகாம்களிலும் படையினருக்கு உரையாற்றியதுடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார். இரு முகாம்களின் விருந்தினர் பதிவேட்டு புத்தங்களிளும் தனது எண்ணங்களை பதிவிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர்.