Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2023 11:00:07 Hours

விசேட படையணியின் வெளிச்செல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை

விசேட படையணியின் படையினரால் வெளிசெல்லும் முன்னாள் பிரதி பதவி நிலை பிரதானியும் விசேட படையணியின் படைத் தளபதியும், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கண்காணிப்புத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு வியாழன் (ஜூன் 01) நாவுல விசேட படையணி நிலையத்தில் பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு இணங்க, பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

அவர் செல்வதற்கு முன், விசேட படையணியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்தினார். மற்றும் விசேட படையணியில் தரம் மற்றும் கலாசாரத்தை பேணுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவைக்காக அந்தந்த விசேட படையணியில் பணியாற்றும் அனைத்து நிலையினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந் நாளில் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், வெளிசெல்லும் தளபதி குழு படம் எடுத்து கொண்டதுடன் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார். பின்னர் அனைத்து பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் 1 வது விசேட படையணியின் அதிகாரிகள் உணவகத்தில் வெளிசெல்லும் தளபதியை கௌரவிக்கும் வகையில் அவரது துணைவியாரின் பங்கேற்புடன் அவருக்கு பிரியாவிடை விருந்து அளித்தனர்.