Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2023 23:55:08 Hours

சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகர் யாழ்ப்பாண தளபதியை சந்திப்பு

கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் பிலிப் கரோக்ஸ் அவர்கள் திங்கட்கிழமை (ஜூன் 12) யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகரை அன்புடன் வரவேற்றார்.

இந்த சுமூக சந்திப்பின் போது, தளபதி மற்றும் கர்னல் கர்ராக்ஸ் பிரான்சுவா பிலிப் ஆகியோர் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், அபிவிருத்தி உதவி மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கர்னல் கர்ராக்ஸ் பிரான்சுவா பிலிப் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் கர்னல் ஒருங்கிணைப்பு சிவில் விவகாரங்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.