Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2023 09:25:02 Hours

மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதிக்கு பிரியா விடை

மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரி முதலி அவர்களுக்கு பிரியாவிடை மரியாதை நிகழ்வு புதன்கிழமை (பெப்ரவரி 22) பயிற்சிப் பாடசாலையின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

வெளியேறும் தளபதியை இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் குமார ரணதுங்கமகே அவர்கள் நுழைவாயிலில் வரவேற்றதுடன், வண்ணமயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் சம்பிரதாய இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றிய பின்னர், அனைத்து நிலையினருடன் தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டார்

மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரி முதலி அவர்கள் 16 செப்டம்பர் 2022 அன்று இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் இப்போது புதுக்குடியிருப்பில் உள்ள 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.