Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2023 18:04:18 Hours

நைஜீரிய குழு இராணுவப் போர்க் கல்லூரிக்குச் விஜயம்

நைஜீரிய இராணுவப் பயிற்சி மற்றும் கோட்பாடு கட்டளையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஓ ஒலபாஞ்சி தலைமையிலான நைஜீரியாவின் பாதுகாப்புக் குழுவானது, புத்தல இராணுவப் போர்க் கல்லூரிக்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்தது. இலங்கை இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி. பிரிகேடியர் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இராணுவப் போர்க் கல்லூரி தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த குழுவினரை மரியாதையுடன் வரவேற்றார்.

இச் சந்திப்பின் போது, பாதுகாப்புக் கற்கை, பயிற்சி நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவப் போர்க் கல்லூரியில் பாதுகாப்பு பயிற்சி இடங்களைப் பற்றிய அறிவைப் பெற்றதுடன், இரு இராணுவத்தினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் மேலும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

இதன் போது கனிஸ்ட பணிநிலை அதிகாரிகள் பாடநெறி மாணவர்களால் திறந்தவெளிப் பிரிவு வளாகத்தில் நிலைக் கொள்ளல் செயல்விளக்கம், இளம் கட்டளைகள் பாடநெறி போன்ற பயிற்சி அமர்வை அவர்கள் கவனித்ததுடன், இராணுவப் போர்க் கல்லூரியின் கேட்போர் கூடம், பாதுகாப்பு பயிற்சி இடம் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் தங்கும் கட்டிட வளாகத்தையும் பார்வையிட்டனர்.

வருகை தந்த தூதுக்குழுவின் தளபதி, துணைத் தளபதி, பிரதான பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுனர்கள் மற்றும் பணிப்பகத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஊடாடும் அமர்வைக் கொண்டிருந்ததுடன், நிகழ்ச்சி முடிவில் இலங்கை இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதியால் அனைவரும் மதிய உணவிற்கு அழைக்கப்பட்டனர்.

இறுதியாக, இலங்கை இராணுவப் போர்க் கல்லூரிக்கு வருகை தந்த நைஜீரிய இராணுவத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் தளபதி அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை வழங்கினார். மற்றும் அவர்கள் புறப்படுவதற்கு முன், பிரதிநிதிகள் குழுவின் தலைவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில எண்ணங்களை பதிவிட்டுச் சென்றார்.