Header

Sri Lanka Army

Defender of the Nation

01st April 2023 18:59:04 Hours

இராணுவ சிங்க படையணி படைத்தளபதி படையலகுகளுக்கு விஜயம்

இலங்கை சிங்க படையணி படைத்தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அண்மையில் கண்டியில் உள்ள 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி முகாம் மற்றும் நுவரெலியாவில் உள்ள 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி முகாமிக்கு விஜயம் செய்தனர்.

2 வது (தொ) இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் செய்த போது, படையணியின் கட்டளை அதிகாரியினால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பின் பின்னர் வருகை தந்த படையணி படைத்தளபதி கௌரவிக்கப்பட்டார்.

அதேபோன்று, நுவரெலியாவில் உள்ள 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி நுழைவாயிலில் இராணுவத்தினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளித்து கௌரவிக்கப்பட்டார்.

பின்னர், வருகை தந்த படைத்தளபதி நுவரெலியா முகாமினுள் நடைபெற்று வரும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன் ‘டோபஸ்’ பண்ணை வாயிலை திறந்து வைத்தார். அதே நேரத்தில் அவர் நலன்புரி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் அதன் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன இரு இடங்களிலும் படையினருக்கு உரையாற்றியதுடன், படையணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னேற்றத்திற்கான தனது நோக்கத்தினை விளக்கினார்.

இலங்கை சிங்க படையணி தலைமையக சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன, இலங்கை சிங்க படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் சமிந்த திப்போட்டுகே மற்றும் மேலும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.