26th May 2023 11:06:12 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ, அவர்கள் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பின்னர் மே 15 ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினரால், கொழும்பு இராணுவ மருத்துவமனை வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்கள் அனைத்து படையிருக்கும் உரையாற்றியதுடன், தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.