Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2023 23:58:19 Hours

தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு 'அஹாஸ் மியாசியா' போர் இலக்கியம் மற்றும் போர்க்கள அனுபவங்கள் பற்றிய விளக்கம்

ரத்மலானை தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த “அஹாஸ் மியாசியா” திட்டத்திற்கு உளவியல் செயற்பாடுகள் பணிப்பகத்தின் ரணவிருவா இதழின் ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈஏஏஎஸ் எதிரிசிங்க அவர்கள் புதன்கிழமை (மே 31) பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நீடித்த உள்நாட்டுப் போரின் காரணமாக இலங்கை பாதகமான விளைவுகளைச் சந்தித்துள்ள நிலையில், மோதலைத் தடுப்பது, தீர்வு மற்றும் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் தர்ஷன அசோக குமார, களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. சுதேஷ் கவிஷ்வர மற்றும் தொழிற்கல்வி தொழில்நுட்பப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. கயான் மதுஷங்க ஆகிய பல அறிஞர்கள் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு தமது அளப்பரிய உதவிகளை வழங்கினர்.

போர் வரலாறு மற்றும் இலக்கியம் பற்றி விவாதிக்க பல்கலைக்கழகம் இதுபோன்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.