Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2023 00:35:40 Hours

வெளியேறும் படைத் தளபதிக்கு விசேட படையணியினரின் மரியாதை

விசேட படையணியின் படையினரால் வெளியேறும், முன்னாள் பிரதி பதவி நிலை பிரதானியும், விசேட படையணியின் படைத் தளபதியும், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு நாவுல விசேட படையணியில் ஜூன் 01 பிரியாவிடை வழங்கப்பட்டது.

இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு அமைய அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணங்களை வழங்குவதற்கு முன், பாதுகாவலர் அறிக்கையிடல் மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

விஷேட படையணியின் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவாக நினைவுத்தூபிக்கு தனது வணக்கத்தை செலுத்தியதுடன், படையினருக்கு உரையாற்றுகையில் விசேட படையணியி நிலைக மற்றும் பிரத்தியேக கலாச்சாரத்தை பராமரிப்பதற்காக அனைத்து நிலையினரின் அர்ப்பணிப்பு சேவைக்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.

வெளியேறும் படையணி தளபதி குழுபடம் எடுக்கவும், வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நடவும் அழைக்கப்பட்டார். அனைத்து பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகளினால் 1 வது விசேட படையணியின் அதிகாரிகளின் உணவகத்தில் பிரியாவிடை விருந்தும் வழங்கப்பட்டது.