Header

Sri Lanka Army

Defender of the Nation

01st April 2023 20:34:24 Hours

வன்னியில் முப்படையினர் மற்றும் பொலிஸாரை சந்தித்த ஜனாதிபதி தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து விளக்கம்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சனிக்கிழமை (1) புனித நகரமான அனுராதபுரத்திற்கான சுற்றுப்பயணத்தின் போது, வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்கள் அனைவரையும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு அழைத்த பின்னர் கலந்துரையாடினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி வைஸ் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேரா, பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரம ரத்ன, சிரேஷ்ட முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் முழு உரை வருமாறு;

நான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போன்றே நாட்டின் பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும்

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாருக்கான விசேட உரையின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சகல உறுப்பினர்களும் தமது கடமைகளை நிறைவேற்றி நாடு அராஜக நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்தமைக்காக ஜனாதிபதி பாராட்டினார்.

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரசித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

முப்படைகளினதும் தலைவரான ஜனாதிபதி, அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் இன்று (01) முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீதிகளில் வன்முறைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை எனவும் வலியுறுத்தினார்.

சரியானதை செய்ய அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக என்பதை அறியவே, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை முதலில் பாராளுமன்றத்தில் சமர்பித்ததாகவும் தெரிவித்தார்.

அதனை உதாரணமாக கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் புதிய சிந்தனைகளுடன் புதிய பயணத்தை தொடர்ந்தால் 25 வருடங்களுக்குள் பெரும் அபிருத்தியை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போன்றே நாட்டின் பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்காக முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக தேவையென வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடந்த காலங்களில் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பராட்டினார்.

முப்படையினர் இந்தப் பணியை செய்யத் தவறியிருந்தால் இன்று நாடு வன்முறை நிறைந்த பூமியமாக இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதேபோல் உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கு இடையிலான போட்டித் தன்மை, இந்து சமுத்திர வலயத்தை பெரிதும் பாதிக்கும் எனவும் இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அந்த பாதிப்பிலிருந்து இலங்கையை மீட்க முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நடந்து முடிந்த போராட்டங்களை போல் அல்லாது எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்த போராட்டங்கள் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியதாக அமையும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தொழில்நுட்ப தெரிவுடன் கூடிய முப்படையினரை உருவாக்குவதற்காகவே “பாதுகாப்பு – 2023“ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக படையினரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதிமேதகு ஜனாதிபதி தனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் அனுராதபுரத்தை தளமாகக் கொண்ட 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடீடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு முன்னிலையில் அவருக்கு அறிக்கை அளித்தார். உரையின் முடிவில், ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கிவிட்டு, அவர் நிகழ்விடத்தை விட்டுச் செல்வதற்கு முன்னர் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடினார்.

(ஆதாரம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)